பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் துயரமே !

அறிவோடு நடந்துகொள்,

அமைதியாக இரு !

இரவின் கொடுமைக்கஞ்சி

நீ கதறுகிறாய்?

இரவு விழுந்துவிட்டது,

இதோ -

விடியல் தலை தூக்குகிறது, என்று ஞானிபோல் தமக்குத்தாமே ஆறுதல் கூறி க் கொள்கிறார்.

என்றாலும் அவர் வாழ்வில் மிஞ்சியது ஏமாற்றமே. அவர் எழுதியுள்ள உரைப் பாடல்களில், வாழ்வின் இறுதியில் அவர்கொண்ட சலிப்பும், ஏமாற்றமும் உருக்க மாகப் பேசப்படுகின்றன.

சில சமயங்களில் என்னை ஒரு ஞானியென்று நான் முட்டாள்தனமாக நி ைன ந் துக் கொள்வதுண்டு. ஒரு மருத்துவனுக்கு இருப்பதுபோல், அருளுள்ளம் என்னிடத் தில் அமையவேண்டும் என்று நான் அவாவுவதுண்டு : அப்பேறு எனக்குக் கிடைக்கப்போவதில்லை. இவ்வஞ்சக உலகில் என்னை நானே தொலைத்துவிட்டு, மக்கட் கூட்ட த் தி ன் புறங்கையால் இடித்துத் தள்ளப்பட்டு அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன். என் கடந்த கால நினைவுகளின் ஆழத்தை அடி க்க டி எட்டிப் பார்த்து, நான் மிகவும் களைத்துப் போய்விட்டேன். ஏமாற்றமும், கசப்புணர்ச்சியும், துன்பமா - மீட்சியா என்று உணர முடியாத குழப்பமுமே எனக்கு மி ஞ் சி யவை என்று புலம்புகிறார் போதலேர்.

மேகத்தின் உச்சியில் பறப்பதற்கு உதவிய பெரிய சிறகு களின் சுமை, பூமியில் கடற் பறவையைச் செயலற்ற தாக்குவதுபோல், கற்பனைச் சொர்க்கத்தில் பறப்பதற்கு

96