பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிமை சைது

அரபு நாட்டில் ஒருசந்தை
        அதன்பேர் உக்கால் என்பதுவாம்
பிரபு மக்கள் அடிமைகளைப்
        பேரம் பேசும் இடமதுவாம்

சைதென் கின்ற ஒருமனிதர்
        சண்டை ஒன்றில் தோற்றதனால்
கைதி ஆனார்; சந்தையிலே
        காசுக் கவரை விற்றனரே.

அக்கிம் என்னும் ஒருவணிகர்
        அவரை விலைக்கு வாங்கினரே
தக்க பரிசுப் பொருளாகத்
        தன்அத் தைக்குக் கொடுத்தாரே.

அருமை அத்தை கத்தீஜா
        அடிமை ஆளைத் தம்கணவர்
பெருமான் நபிகள் நாயகம்பால்
        பிரியத் தோடு கொடுத்தாரே.

அன்பு மிக்க நாயகியார்
        அளித்த பரிசை நாயகமும்
இன்ப மாக ஏற்றனரே
        இனிதே அடிமை தனைநோக்கி,