பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11



கங்கைத் தண்ணீர்

கங்கைக் கொருநாள் நீராடக் கருதிச் சென்றார் குருநானக் அங்கொரு முதிய பார்ப்பனன்நீர் ஆட வந்து சேர்ந்தானே. கதிரோன் வரும்கீழ்த் திசைநோக்கிக் கையால் நீரை யள்ளியள்ளி முதியோன் இறைத்தான்; மந்திரங்கள் முணுமுணுத்தான்; கைதொழுதான். கண்டார் இதனைக் குருநானக் கருத்தில் லாமல் இருகையால் மொண்டு நீரை இறைக்கின்ற முதியோன் முன்னே சென்றாரே. ஆெற்றின் நீரை எதற்காக அள்ளி யள்ளி இறைக்கின்றீர்? மாற்றம் சொல்லவேண்டும்?? என மற்றவன் தன்னைக் கேட்டாரே! "இறந்து போன முன்னோர்கள் இருக்கின் றார்அவ் வானுலகில் மறந்தவர் செய்த பாவமெலாம் மறையத் தண்ணீர் இறைக்கின்றேன்.