பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


"இங்கே பத்துக் கல் தொலைவில்
இருக்கும் வயலை அடையாதேல்
எங்கோ இருக்கும் வானுலகை
எப்படிக் கங்கை நீரடையும்?"

சொல்வீர் என்றார் குருநானக்
சோர்ந்து போனான் முதுகிழவன்.
"நல்லோய் நான்தான் மூட”னென
நவின்றான், திருந்தி வாழ்ந்தானே!

முள்ளை முள்ளால் அகற்றுதல்போல்
 :::மூடத் தனத்தை ஒழித்திடவே
உள்ளி மூடர் போல் நடித்தே
உண்மை யறிஞர் பயன்கண்டார்!