பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18


ஆவ லோடு தாராவை அம்பு பாய்ச்சி வீழ்த்தியவன் தேவ தத்தன் எனுஞ்சிறுவன் சித்தார்த்தன் தன் உறவினனாம். என்றன் அம்பால் வீழ்ந்ததுதான் எனக்குச் சொந்தம் ஆதலினால் சென்றத் தாரா தனைக்கொடுக்கச் சித்தார்த் தனை நீ கேட்டிடுவாய் செல்வாய்? என்றோர் பையனையே தேவ தத்தன் அனுப்பினனே. கொல்ல முயன்றோன் தன்னிடமே கொடுக்க மாட்டேன் தாராவை, உயிரைப் போக்க முயன்றவனுக் குரிமை யில்லை தம்பி,இதன் உயிரைக் காத்த எனக்கேதான் உரிய தாகும்’ எனச்சொல்லி அந்தப் பையன் தனைத்திருப்பி அனுப்பி விட்டான் சித்தார்த்தன். வந்து வீழ்ந்த தாராவும் வாழ்வு பெற்றுப் பிழைத்ததுவே. அன்பு கொண்டு தாராவை ஆதரித்த சிறுவன்தான் துன்பம் போகும் வழிகண்ட தூய புத்த பெருமானாம்.