பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25



கரித்துண்டு

கண்ணில் பட்ட கரித்துண்டைக் கையில் எடுப்பான்; சுவர்மீதே எண்ணங் கொண்ட படியெல்லாம் ஏதோ கிறுக்கித் தள்ளிடுவான். வாயைப் பிளக்கும் கரும்பூனை வாலைக் குழைக்கும் நாய்க்குட்டி பாய்ந்து வந்த இளங்கன்றைப் பரிவாய்த் தடவும் தாய்ப்பசுவே. இப்படிப் பட்ட உருவங்கள் எழுதும் அவன்கைக் கரித்துண்டே தப்பிது தப்பென் றெத்தனைபேர் தடுத்தும் நிறுத்த வில்லையவன். வீேட்டுச் சுவரைக் கெடுக்காதே வேண்டாம் மாமா காண்பாரேல் காட்டுப் புலியாய்ச் சீறிடுவார் கரியை எறிந்து விடு?? வென்றே வேலைக் காரர் சொன்னதெலாம் விழவே யில்லை அவன்செவியில் கோபக் கார மாமாவைக் குறித்தும் அஞ்ச வில்லையவன்.