பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26


சீறும் மாமா வீட்டுக்குத் திரும்பி வருமுன் கரிச்சுவரை நீரிட் டழித்து வைத்திடுவார் நிகழும் இதுதான் நாள்தோறும். ஒருநாள் அழிக்க மறந்துவிட்டார் உள்ளே நுழைந்தார் மாமாவே. கேரியாய்ச் சுவரைச் செய்ததுயார் காட்டு வீர்?’ என் றுறுமினரே! இேன்று நேற்று நடப்பதல்ல இதுதான் வேலை நாள்தோறும் கொன்று விடுவீர் எனநினைத்தே கூறா திருந்தோம்?’ என்றுரைத்தார். மாமா கோபம் குறைந்திடவே மருகன் தன்னை அருகழைத்தார் ஆமாம் உன்றன் ஆசைதனை அறிந்து கொண்டேன் நா??னென்றார். தோளும் மையும் நான்தருவேன் தனியோர் அறையும் நான்த்ருவேன் நீளும் ஆசை மனத்தாலே நினைத்த தெல்லாம் வரைந்திடலாம். கேரியை எறிந்து விடு வென்றே கனிவாய் மாமா உரைத்தவுடன் சிறிதும் மறுப்புச் சொல்லாமல் சிறுவன் எறிந்து விட்டானே. படங்கள் வரையும் கலைதனிலே பரிசும் புகழும் மிகப்பெற்றுத் திகழ்ந்த பெரியார் ரவிவர்மா சிறுவன் இவனே ஆமாமாம்!