பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27



தந்தி வந்தது

தந்தி என்னும் குரல்கேட்டுத் தாவி வந்தான் குமரப்பன் வந்து வாங்கி உறைகிழித்து வாசித் தானே செய்திதனை. 'கவலைக் கிடமாய் அப்பாதான். காய லாகப் படுத்துள்ளார் தவறா துடனே புறப்படவும்?? தந்திச் செய்தி இதுவாகும் துடிக்கும் உள்ளம் உடையவனாய்த் துரித மாகப் பாய்ந்தோடிப் படுக்கை பெட்டி இவற்றோடு பறந்து சென்றான் அப்போதே. குப்குப் பென்று புகைவண்டி கூவிச் சென்றது மறுநாளே அப்பா இருக்கும் ஊருக்கே அவனைக் கொண்டு சேர்த்ததுவே. தோப்பில் வேலை பார்த்துவிட்டு தோளில் துண்டைப் போட்டபடி வேப்பங் குச்சி யாற்பல்லை விளக்கிக் கொண்டு நடந்துசெல்லும்