பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


அவர்யார்? அப்பா அப்பாதான் அவருக் கொன்றும் குறைவில்லை எவரோ தவறாய்த் தந்திதனை எனக்குக் கொடுத்தார் எனநினைத்தான். சட்டைப் பையில் வைத்திருந்த தந்தியை எடுத்து மறுபடியும் வெட்ட வெளிச்சம் தனிற்படித்தான் வியப்புக் கடலில் மூழ்கினனே. குடித்தன மிருக்கும் மற்றொருவர் குமார சாமிக் கவர்வீட்டார் அடித்த தந்தி அதுவென்றே அறிந்து வெட்கம் கொண்டனனே. முழுதும் படித்துப் பாராமல் மூடத் தனமாய்த் தான்செய்த பழுதாம் செயலை எண்ணியவன் பழித்துக் கொண்டான் தன்னறிவை. அன்றே திரும்பி வண்டியிலே அப்பா பார்க்கு முன்னாலே நன்றே சென்னை வந்துற்றான் நண்பர்க் களித்தான் தந்திதனை. கவன மிருந்தால் என்றும்வீண் கவலை யின்றி வாழ்ந்திடலாம் தவறு செய்தல் எனுந்தீமை தவிர்த்தே இன்பம் கண்டிடலாம்,