பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41



பூமிக்குப் பாரம்

கந்தப்பர் என்றொருவர் இந்த ஊரிலே காசு பணம் வைத்திருந்தார் சொந்த பாகவே சல்லி சல்லி யாக எண்ணிச் சேர்த்து வைப்பவர் சரித்திரத்தில் யாருமில்லை அவர் நிகர்ப்பவர்! இருப்புப் பெட்டிப் பூட்டுதன்னை ஆட்டி ஆட்டியே திருப்பித் திருப்பிப் பார்த்திடுவார் மீட்டு மீட்டுமே. நிறைந்த வண்ணம் சோற்றையுண்ண நேர்ந்து விட்டாலே குறைந்து போகும் பணம் என்றெண்ணிக் கொஞ்சமே யுண்பார்! ஐயா பிசசை என்று கேட்டு வந்த பேர்களும் மெய்யாகவே திட்டிவிட்டு மீளுவார்களே!