பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47


முத்திரை மோதிரம் தனைக்கழற்றி முறுவலை முகத்தினில் கொண்டேற்றி எத்தனை வேண்டுமோ அத்தனையும் ஏற்றுநீ செல்:கென விடைகொடுத்தான்! நன்றிகள் உரைத்தனன்; பொருளறைக்கு நடந்தனன், விரைந்தனன்; அதிகாரி தன்னிடம் மன்னவன் மோதிரத்தைத் தந்தனன் கட்டளை தனைச்சொன்னான். கரும்பினும் இனியதாம் நெஞ்சுடையார் கருணையின் வடிவமாய்த் தோன்றியவர் விரும்பிய பெற்றுநீ செல்லென்றே விடைகொடுத் தார்பெரும் வள்ளலவர்! ஐம்பதி னாயிரம் பொன்கொடுப்பாய் அழகுற என்மகள் திருமணத்தை எம்மவர் வியந்திட நடத்திடுவேன் - எடுஎடு விரைவினில்?’ என்றுரைத்தான். எளியவன் இவன்மகள் திருமணத்திற். கித்தனை பெரும்பொருள் கொடுத்திடவோ? துளியொரு பொருத்தமும் இல்லையிதில் சூதிருந் தாஸ்து தெளிந்திடுவேன். இப்படி நினைத்தந்த அதிகாரி இருஇரு சற்றென ஓடிவந்தான் தப்பிருந் தாலெனை மன்னியுங்கள்; தகுதிக்கு மீறிய பொருள்கேட்டான்.