பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை


கதை கேட்பதென்றால் எல்லாருக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. மிகப் பழங்காலத்திலிருந்து மனிதன் கதை கேட்டே வளர்ந்திருக்கிறான். கதை கேட்பது மனிதனுக்கு ஒரு பொழுது போக்கு!


அந்தப் பொழுதுபோக்கே பயனுள்ளதாக அமைந்து விட்டால், நன்மை இரண்டு பங்காகிறது. அறிஞர்கள் மனிதனுக்குக் கதை கேட்பதில் உள்ள ஆசையை அடிப்படை யாக வைத்து-அறிவு தரக்கூடிய நல்ல -- கருத்துக்களை கதைகளின் வழியாகச் சொன்னார்கள்.


குழந்தைகளுக்குக் கதை கேட்ப தென்றால் கற்கண்டு தின்பது மாதிரி. அந்தக் கதைகளே பாட்டில் அமைந் திருந்தால் அவர்களுக்கு ஏற்படும் களிப்பே தனி. ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் சொல்லுகிற கதைகள் மிக இன்பம் தரக் கூடியவை.


இந் நூலில் 21 கதைப் பாடல்கள் உள்ளன. ஒவ் வொன்றும் ஒவ்வொரு வகையில் சுவையானவை. எளிய பாடல்கள். இசையோடு பாடினால் இன்பந் தரக் கூடியவை. நல்ல கருத்துள்ளவை. பெரும்பாலானவை உண்மையில் நடந்த கதைகள்.


தமிழ்நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்கு இவை என் அன்புப் படைப்புகள்!

நாரா நாச்சியப்பன்