பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48


கொடுத்திட லாமெனிற் கொடுத்திடுவேன் கூறுக மன்னவ? எனக்கேட்டான். கொடுத்திடு கொடுத்திடு கேட்டபடி கொடுத்திடு?’ என்றனன் அலெக்சாந்தர் வியந்தனன் மலைத்தனன் அதிகாரி வேந்தனும் அவன் உளம் கண்டுணர்ந்தான் நயந்திட்த் தக்கநல் உள்ளமுள்ளான் நாகரி கத்துடன் உரைக்கின்றான். இளகிய நெஞ்சினை மதிக்காமல் இயன்றதைச் சுருட்டிட எண்ணுகிறான்! அளவுக்கு மீறிய பேராசை அவனிடம் குடியுள துண்மைதான்! ஆயினும் நானொரு மன்னனன்றோ அருளிய மொழிதனை மாற்றுவதோ! தாயினும் மேலென எனைமதித்தே தாள்பணிந் தானிது மறந்திடவோ! மதித்துவந் தென்னடி மண்டியிட்டான் மன்னவன் துணையென அண்டிவிட்டான் கொதித் திடல் முறையிலை; அருள்புரிந்து கொடுத்திடல் தான்முறை’’ யென்றுரைத்தான் போற்றினன் மன்னனை அதிகாரி பொருளினை ஏழையும் கேட்டபடி ஏற்றனன்; களிப்புடன் செலக்கண்டே இறும்பூ தடைந்தனன் அலெக்சாந்தர்.