பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55



இளங்கோ துறவு

வங்கக் கடலின் அலைநுரைபோல் வண்ணக் கவரி காற்றெழுப்பச் சிங்க அணையில் வீற்றிருந்தார் சேர லாதப் பெருமன்னர் செங்குட் டுவனாம் மூத்தவனும் செய்ய மனத்தன் இளங்கோவும் அங்கே மன்னர் அருகினிலே அணிசெய் மணிகள் போலிருந்தார். முதியன் ஒருவன் அங்குவந்தான் முன்னும் பின்னும் அறிந்துரைக்கும் மதியன் என்றார்; மன்னவரும் மதித்து வணங்கி வரவேற்றார் சனியன் புகுந்த நாவுடையான் தரித்திரத்தின் நோவுடையான் இனிய செய்தி சொல்லாமல் ஏதோ உளறத் தொடங்கிநின்றான் விரைவில் நீஇவ் வாழ்விழப்பாய் வேந்தே பொன்னா டேகிடுவாய் அரைசை யுனக்குப் பின்னாலே ஆளும் இளங்கோ’ என்றுரைத்தான்.