பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60


மோசம் செய்தல் ஒரு குற்றம்-கொலை முடித்தல் மற்றோர் பெருங் குற்றம் நீசக் குயிலே இதற்கெல்லாம்-இன்று நீதான் என்ன பதில் சொல்வாய்? கானக் கோழி பேசியவுடன்-அந்தக் காட்டுப் பறவை அத்தனையும் வானம் அதிர முழங்கினவாம்! -குயில் வாழக் கூடா தென்றனவாம்! காட்டை விட்டு விரட்டிடுவீர்!-எதிர் கண்ட இடத்தில் கொத்திடுவீர்! வேட்டை யாடி ஒழித்திடுவீர்-சற்றும் வேண்டாம் ஒதுக்கித் தள்ளிடுவீர்! வாயில் வந்த படியெல்லாம்-கத்தும் வண்ணப் பறவைக் கூட்டத்தே நேயக் குயிலும் பேசியதாம்-சற்று நேரம் என் சொல் கேட்டிடுவீர்! அமைதி கொண்டு கேட்டிடுவீர்-பேர் அறிவு கொண்ட நெறித்தலைவீர்! சுமத்திய குற்றம் அத்தனையும்-மறுத்துச் சொல்ல என்னால் ஆகவில்லை! உண்மை மறுத்துப் பொய்யுரைக்க-என் உயிர்போம் எனினும் ஒப்பேன்நான் கண்ணே அனைய குஞ்சுகளை-அடை காக்க நானும் விழைகின்றேன்.