பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62


குயிலின் பேச்சைக் கேட்டதன்பின்-வான் கோழி எழுந்து கூறியது: குயிலே தனது குற்றத்தை-ஒப்புக் கொண்டு விட்டது கண்டீர்கள். உரிய தண்டம் கொடுத்திடலே-நல் ஒழுங்காம்; நெறியாம் என்றதுவே! பெரிய ஆந்தை வான்கோழி-சொன்ன பேச்சுக் காமாம் போட்டதுவே! மற்றோர் தலைவர் நெறிமன்றில்-உள்ள மரங்கொத் திதான் எழுந்தங்கே சற்றும் பொருத்தம் இல்லை நீர்-குயிலைச் சாட்டும் பழியில் நெறியில்லை. ஏதோ காக்கைக் கூட்டினிலே-முட்டை இட்ட குற்றம் பெரிதென்றே சூதாய்க் குற்றம் சுமத்துகின்றீர்! - தண்டம் கொடுக்க முடிவு செய்கின்றீர்! கானில் வாழும் நமக்கெல்லாம்-இன்ப கானம் வழங்கிச் சிறப்பளிக்கும் ஞானக் குயிலைத் தண்டித்தால்-அது நமக்கே கேடாய் முடிந்துவிடும். பிறர்க்குக் கேடு செய்வதாய்-மிகப் பெரிதாய்க் குற்றம் சுமத்துகிறீர் அறவே பேச மறந்தீர்கள்-நமக்கு அதுசெய் கின்ற நன்மைகளை!