பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எது மேல்?

ஒருநாள் காட்டுப் பாதையிலே
யூதன் ஒருவன் சென்றனனே
திருடர் கூட்டம் ஒன்றவனைச்
சேர்ந்து வளைத்துக் கொண்டதுவே.

அடித்தும் உதைத்தும் பணப்பையை
அவர்கள் பறித்துச் சென்றனரே.
உடுத்தத் துணியும் இழந்தந்த
யூதன் கிடந்தான் வழியோரம்.

அடியும் உதையும் பலமாகும்
அதனால் காயம் பெரிதாகும்
வடியும் குருதி மிகமிகவே
வலிதாங் காமல் முனகினனே.

கொள்ளைக் காரர் சென்றபின் ஓர்
குருக்கள் அந்த வழிச்சென்றார்
சள்ளைப் பட்டுத் துடிதுடித்துச்
சாகக் கிடப்போன் தனைக்கண்டார்.

ஓரங் கிடக்கும் அவனுக்கோர்
உதவி கூடச் செய்யாமல்
ஈர மற்ற மனத்துடனே
ஏகி விட்டார் தன்வழியே.