பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100|குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

பணிபுரிந்த நேரத்தில் பாவேந்தர் புதுவையில் ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். மயிலம் முருகன் பேரில் எனக்கும் ஈடுபாடு; அவருக்கும் ஈடுபாடு. அவர் மயிலம் முருகன் மீது சுப்பிரமணியர் துதியமுது' பாடினார். நானும் முருகனைப்பற்றிப் பாடல் எழுதும் பண்புடையேன். மயிலம் கோவிலில் அவரும் நானும் சந்தித்து அளவளாவுவோம்.

நான் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் நூலகராக இருந்து கொண்டு கரந்தைக் கவியரசு வெங்கடசாலம் பிள்ளை யிடம் தமிழ்ப் பயின்றேன். அப்போது பாரதிதாசனார் தஞ்சாவூர் வரும்போதெல்லாம் தமிழ்ச் சங்கத்துக்கு வரு வார். எங்கள் நட்பு வளர்ந்தது.

சுயமரியாதைக் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் நான் செல்வதுண்டு; ஆனால் தீவிரமாகப் பங்கேற்பதில்லை. திருவாரூர்ச் சுயமரியாதை மாநாட்டில் சந்தித்தோம்; ஒன்றாகத் தங்கியிருந்தோம். நான் உரை எழுதிய ஐங்குறு நூறு-மருதத்திணை வெளிவந்தபோது பாரதி தாசனாரின் பாடல் முதல் தொகுதி வெளியாயிற்று.

ஞானியார் சுவாமிகள் தலைமையில் சைவ சமாஜக் கூட்டம் புதுவையில் நடைபெற்றது. நானும் மணி. கோடீசுவரனும்' கூட்டத்துக்குச் சென்றிருந்தபோது பாரதிதாசனார் வீட்டில் தங்கியிருந்தோம். தமிழைப் பற்றியும் சைவத்தைப் பற்றியும் ஆர்வத்தோடு பேசு

வார் .

நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த போது, அடிக்கடி மனைவியோடு எங்கள் வீட்டுக்கு வரு

பச்சையப்பர் கல்லூரிப் பேராசிரியரும் மறைமலையாரின் மாணவருமான மணி. திருநாவுக்கரசின் தம்பி மணி. கோடிசு வரன். வேலூர் மகந்தை உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரி யர்; ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாளர்.