பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Þ முருகுசுந்தரம்/I05

தோற்றமும், சிங்க முகமும், துணிச்சலான பேச்சும் என் னைப் பெரிதும் கவர்ந்தன. என்னையறியாமல் அவர் பால் நான் ஈர்க்கப்பட்டேன். பாவேந்தர் சேலம்-தரும புரிப் பக்கம் எப்போது வந்தாலும் நான் உடனிருப்பேன். எப்போது வந்தாலும் எங்கே செல்லையா?’ என்றுதான் முதலில் தேடுவார்.

திருச்சி தி. க. மாநாட்டுக்கு நான் சென்றிருந்த போது அவரும் வந்திருந்தார். ஏதோ ஒரு விடுதியில் தங்கி யிருந்தார். என்னை நாள்தோறும் காலையில் வந்து சந்திக்கச் சொல்லுவார். இருவரும் ஆற்றுக்குக் குளிக் கச் செல்லுவோம். சிந்தாமணியில் ஒரு குடிசையில் ஓர் அம்மாள் பிட்டு, ஆப்பம், இடியாப்பம் மூன்றும் சுடு வாள். நேராக அங்கு சென்று சாப்பிடுவோம். பாவேந் தருக்கு ஆப்பமும், இடியாப்பமும் மிகவும் பிடிக்கும். வழக்கமாகக் காலையில் ஆறு பிட்டு, நான்கு இடியாப் பம், இரண்டு ஆப்பம் சாப்பிடுவார். இடியாப்பத்துக்குப் பழைய பாகற்காய்ப் புளிக் குழம்புதான் அவளிடம் இருக்கும். செல்லையா! பழைய குழம்பு இடியாப்பத் துக்கு மிகப் பொருத்தம்' என்று கூறிச் சுவைத்துச் சாப் பிடுவார். இடை வேளையில் வேறு யாருடனாவது பிரி யாணி சாப்பிடப் போய்விடுவார். நான் சைவ சாப் பாட்டுக்குப் போய்விடுவேன். சாப்பாடு அப்போது 6 அணா. இலையை அப்போது நாமே எடுத்துப் போட வேண்டும். இரவுச் சாப்பாட்டுக்குப் பாவேந்தரை மணி யம்மையிடம் அழைத்துப் போவேன். மீன் குழம்பும் கறி வறுவலும் மணியம்மை உணவோடு பரிமாறுவார். பாவேந்தர் எப்போதும் நிதானமாகவே சாப்பிடுவார். அவர் சாப்பிடும் வரையிலும் நான் அருகில் அமர்ந் திருக்க வேண்டும்.