பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110/குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

தலையில் ஊற்றுங்கள்’ என்றார் பாவேந்தர். அப் படியே செய்து துவட்டிப் போதையைத் தெளிய வைத் தோம். பாவேந்தர் இரவில்தான் நீண்ட நேரம் எழுதுவார். அப்போது பிராந்தியைக் கொஞ்சங் கொஞ்சமாக ஊற் றிச் சோடாவில் கலந்து குடிப்பார். துணைக்குக் கறி வேண்டும். இரவு தான் எழுதுவதற்கு அமைதியான நேரம்’ என்று கூறுவார். விடிந்த பிறகு குளித்துச் சிற் றுண்டி அருந்திவிட்டுத் தூங்குவார்.

கவி காளமேகம் படப்பிடிப்பின் போது அவருக்கும் எனக் கும் ஏற்பட்ட நட்பு அவர் இறக்கும் வரையில் தொடர்ந் தது. தருமபுரிப் பக்கம் வந்தால் என் வீட்டில் வந்து ஓரிருநாள் தங்காமல் போகமாட்டார். பென்னாகரத் தில் நடைபெற்ற அரசியல் கூட்டங்களிலும் அடிக்கடி வந்து பேசியிருக்கிறார்.

பாவேந்தர் எப்போதும் ஆரவாரமாகப் பேச மாட்டார்.

நிதானமாகப் பேசி சுருக்கென்று குத்துவார். இவர்

பாணியே தனி. பெரியாரைப் போல அஞ்சாமை மிக்க

வர்; சொந்த சிந்தனைக்காரர். (Original Thinker)

பென்னாகரம் தமிழ்ச் சங்கத்தில் பேசியபோது, “தமிழர

சர்களால் தான் வைதீகம் வளர்ந்தது; நாடு கெட்டது. ஓரி, காரி,பேகன் எல்லாருமே மடையர்கள். பத்து சதுர மைலை ஆண்டுகொண்டு பத்துக் கூத்தியா வைத்திருந்

தார்கள்’’ என்று புலவர்கள் நடுவிலே துணிச்சலோடு பேசினார்.

சில செய்திகளை ஒளிவு மறைவு இல்லாமல், உள்ளத் தில் பட்டதை-பிறர் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் - பச்சையாகப் பேசக்கூடிய வர்கள் எனக்குத் தெரிந்தவரை இரண்டு பேர்தான். ஒருவர் பெரியார் மற்றொருவர் பாரதிதாசன்.

ஒருமுறை உடலுறவைப்பற்றிப் பேச்சு வந்தது. என்ன