பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில அரும்புகள்

பேச்சுவாக்கில் பேராசிரியர் பற்றி

பேராசிரியர் அன்பழகன் பேச்சைக் கேட்ட பாவேந்தர் கூறியது: 'பலர் பிறந்து பேசக்கற்றுக் கொள்கிறார் கள்; அன்பழகன் பேசிக்கொண்டே பிறந்துவிட்டான்."

1943ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் ஒரு பேச்சுப்போட்டி நடைபெற்றது, அண்ணாமலைப் பல்கலைக்கழக மாண வராக அப்போது இருந்த பேராசிரியர் அன்பழகன் அப் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு முதல்பரிசு பெற் றார். பாண்டிச்சேரி ஆளுநர் அன்று மாலை வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பதாக இருந்தார். அன்று மாலை அன்பழகனுக்கு பூட்ஸ் வாங்க அவரைப் பாவேந் தர் அழைத்துச் சென்றார். பூட்ஸ் வாங்கிக் கொண்டு திரும்புவதற்குள் பரிசளிப்பு விழா முடிந்து விட்டது.

பாலும் தெளிதேனும் விழுப்புரத்துக்குப் பக்கத்தில் ஒரு சிற்றுார். அவ்வூரி லிருந்த உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியருக்குப் பாவேந்தர் பாட்டில் அளவுகடந்த ஈடுபாடு. பள்ளி இலக்கிய விழாவில் பேசப் பாவேந்தருக்கு அழைப்பு விடுத்து எழுதியிருந்தார். பாவேந்தரும் ஒப்புக் கொண் டார். அவ்வூரில் வாழ்ந்தவர்களுள் பெரும்பாலோர் செல்வாக்குமிக்க காங்கிரஸ்காரர்கள்; பழுத்த வைண வர்கள். பெருங்கவிஞர் பேச வருகிறாரே என்று ஊர்ப் பிரமுகர்கள் திரண்டு வந்திருந்தனர். கூட்டம் துவங்கு வதற்குச் சற்றுமுன்பாகப் பாவேந்தர் பள்ளிக்கு வந்தார். நெடிய தோற்றம், பருத்த வெளவால் மீசை, லாங்