பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 14:குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

கோட், கையில் சிகரெட்-டின் நெருப்புப் பெட்டி ஆகிய திருக்கோலத்தோடு உள்ளே நுழைந்தார் பாவேந்தர். விழா துவங்கியது. பாவேந்தர் பேச எழுந்தார். பாலும், தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் துமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா - என்ற ஒளைவையார் பாடல் அவர் வாயில் சிக்கிக் கொண்டது.

'பாட்டை எழுதியிருக்கறதைப் பாரு... முண்டம். முத் தமிழும் அவ்வளவு ச்சீப்பா என்ன? அவ அவ தமிழில புலமை பெறுவதற்கு எத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட வேண்டியிருக்கு... எத்தனை பேராசிரியர் கிட்டப் பாடங் கேக்க வேண்டியிருக்கு. ஓரணாவுக்கு பாலும், பழமும் சுண்டலும் வாங்கிப் பிள்ளையாருக்குக் கொடுத்துட்டாத் தமிழ் வந்துருமா...இது என்ன காண்ட்ராக்டா? உதைக் கணும்' என்று பேசிமுடித்து விட்டுக்கீழே இறங்கினார். அடுத்த வாரத்தில் அந்தத் தலைமையாசிரியர் தண்ணீர் கிடைக்காத ஓர் ஊருக்கு மாற்றப்பட்டார்.

பழம் பால்

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் குழுக் கூட்டம். விருந்து நடந்து கொண்டிருந்தது. விருந்தை முடித்துக் கொண்டு வெளியில் வந்தார் பாவேந்தர்.

வெளிமுற்றத்தில் மயிலம் தமிழ்க் கல்லூரி முதல்வர் துரைசாமி ஐயா நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் இரவில் உணவு உண்பதில்லை; பழமும் பாலும் சாப்பிடுவார். அவரைச் சாப்பிட அழைத்தார்கள். அரு கிலிருந்த பாவேந்தர், 'துரைசாமிஐயா இரவில் சாப்பாடு சாப்பிடறதில்லை. அவருக்குப் பழம்பால் இருந்தாக் கொடுங்க” என்று சொன்னார். அத்தொடரின் சிலேடை

நயத்தைப் புரிந்து கொண்டு எல்லாரும் சிரித்தார்கள்.