பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12/ குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

சொல்லுவார். இலக்கணக் கருத்துக்கள் எப்போதும் விரல் துனியில் (Finger tips) காத்திருக்கும். இலக் கனத்தை விளக்கி அதற்குரிய சூத்திரத்தையும் உடனே சொல்லுவார். 'அறிதோறும் அறியாமை கண்டற்றால்' என்று வான் புகழ் வள்ளுவர் கூறிய கருத்து அவருக்கு மிகவும் பொருந்தும். அவர் அறியாத புதிய செய்தி ஒன்றையாவது கூறினால் அப்படியா!' என்று மூக்கின் மேல் விரல்வைத்து வியப்போடு கேட்பார். 'கபிலர் எழுதிய எண்ணுரலே சாங்கியம். சாங்கியத் தின் அடிப்படையிலேயே திருவள்ளுவர் திருக்குறளைத் எழுதினார். திருக்குறளின் உண்மைப் பொருளைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் சாங்கியத்தின் அடிப் படையில் அதற்கு உரை காணவேண்டும்' என்று பாவேந்தர் அடிக்கடி கூறுவார். எனவே சாங்கிய நூலின் படி ஒன்று கிடைக்குமா என்று அவர் சென்ற இடங்களிலெல்லாம் தமிழறிஞர்களைக் கேட்பார். கடைசியில் மதுரை புதுமண்டபத்தில் அந்நூல் கிடைத் தது. கிடைத்தற் கரிய ஒரு பெரிய புதையலைக் கண் டெடுத்ததுபோல் பாவேந்தர் மகிழ்ச்சியடைந்தார்.

சாங்கியத்தைப் படித்து முடித்ததும் அந்நூலின் அடிப் படையில் திருக்குறளுக்குத் தாமே புத்துரை காணவேண் டும் என்ற எண்ணம் அவருள்ளத்தில் ஏற்பட்டது. உடனே அம்முயற்சியில் இறங்கினார். கடலூர் பிருந்தா வனம் விடுதியில் ஓர் அறை எடுத்துத் திருக்குறளின் பாயிரத்துக்கு உரையெழுதத் தொடங்கினார்.அப்போது திருக்குறள் முனிசாமி பாவேந்தரைப் பார்க்க வந்தார். 'அகர முதல எழுத்தெல்லாம்' என்று தொடங்கும் முதற் குறலுக்கு உரையெழுத மூன்று நாள் ஆராய்ச்சி நடந் தது.

"ஆதிபகவன் முதற்றே உலகு'- என்று வள்ளுவர்பாடி யிருக்கிறாரே! நடுவில் வந்த பகவன் யார்?" என்று

தான் ஐயத்தைக் கிளப்பினேன். ஊரெல்லாம் பட்டி