பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14/குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த நேரம். சென்னை நகரமக்களெல்லாம் குடிபெயர்ந்து வேற்றுார் களுக்குச் சென்று கொண்டிருந்தனர். திருச்சி தேவர் ஹாலில் சுயமரியாதை மாநாடு ஒன்று நடைபெற்றது. திருவாளர்கள் செளந்தர பாண்டியன், பெரியார் ஈ.வெ.ரா., பட்டுக்கோட்டை அழகிரிசாமி, ஈழத்தடிகள், அறிஞர் அண்ணா போன்ற பெரிய தலைவர்கள் அம் மாநாட்டில் கலந்துகொண்டனர். பாவேந்தரும் மேடை யில் இருந்தார். மற்றொரு நாற்காலி கொண்டுவரச் சொல்லி என்னை அழைத்து அருகில் உட்கார வைத்துக் கொண்டார். நெற்றியில் குங்குமம் அணிந்து ஆத்திகக் கோலத்துடன் அமர்ந்திருந்த என்னை எல்லாரும் ஒரு மாதிரியாகப் பார்க்கத் தொடங்கினர். யாரோ ஒரு சு. ம.த்தோழர் பாவேந்தரின் அருகில் வந்து 'யாரிவர்?" என்று மெதுவாகக் கேட்டும் விட்டார்.

பாவேந்தர் அந்தத் தோழரைப் பார்த்து 'அவரா? அவர் ஓர் உலகம்! போ! போ!' என்று கூறினார். எதிர்ப்புக்கு அஞ்சாத அவர் துணிச்சலை நான் வியந்தேன். அவர் மீது நான் கொண்டிருந்த மரியாதை பன்மடங்காக உயர்ந்தது. அப்போது பெரியார் ஈ.வே.ரா. குடியர சில் இராமாயண ஆராய்ச்சி எழுதிக்கொண்டிருந்த நேரம். மாநாட்டு மேடையில் இராமாயணத்தைக் கடுமை யாகத் தாக்கியதோடு கொளுத்தவும் செய்தார். இராமா யணத்தைப் போலவே குறளும் வைதீகத்தை ஆதரிப்பது என்று சொல்லி அதையும் கடுமையாக விமர்சனம் செய் தார். அதையும் கொளுத்தவேண்டும் என்று சொன் னார். ஆனால் பாவேந்தருக்கு அக்கருத்து உடன்பாடு இல்லை. திருக்குறளின் அடிப்படையில் கழகத்தை அமைக்க வேண்டும் என்பது அவர் கருத்து.

சென்னைக்கு அருகில் உள்ள பெரிய பாளையம் அங்கா ளம்மன் கோயில் மிகவும் புகழ்பெற்ற அம்மன் தலம். ஆடிமாதம் வெள்ளிக்கிழமைகளில் அங்கு நடைபெறும்