பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16/குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

கெடுப்பதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று அஞ்சாமையோடு அவர்களைப்பார்த்துக் கூறி னார். அத்தகைய துணிச்சல் பாவேந்தருக்கு மட்டுமே உரியது.

பாவேந்தர் நாத்திகர். நான் ஆத்திகன்; அம்பாளை வழி படுபவன்.ஆனால் இந்தக் கொள்கை வேறுபாடு எப்போ தும் எங்கள் நட்புக்குக் குறுக்கே நின்றதில்லை. அவர் நாத்திகக் கருத்துக்களைக் காரசாரமாகப் பேசிக் கொண்டிருப்பார். நான் அமைதியாக அருகிலிருந்து கொண்டு என் வேலையைக் கவனிப்பேன். நான் நாள் தோறும் வணங்கும் அம்பாளைப் பற்றி ஒரு பாட்டு எழுதித்தரும்படி அவரை அடிக்கடி கேட்டுக்கொண்டி ருந்தேன்; அவர் மறுத்துக் கொண்டிருந்தார். பிறகு என் நச்சரிப்புத் தாங்காமல் ஒரு நாள், "சரி. சொல்ற ... எழுதிக்க!” என்று சொல்லிவிட்டுத் தலையணையில் முழங்கையை ஊன்றிப் படுத்துக்கொண்டே மளமள வென்று சொல்ல ஆரம்பித்தார். நானும் எழுதிக் கொண்டேன். அப்பாடலை மிகவும் பத்திரமாக வைத்து நாள்தோறும் பாராயணம் செய்து வந்தேன். அப்பாடல் என்னிடம் வந்த பிறகு என் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. பொருளாதார வசதியும், புகழும் என்னைத் தேடிவந்தன.

ஒருமுறை அண்ணாப்பிள்ளைத் தெருவில் உள்ள வசந்த விகாரில் நாடக ஒத்திகை ஒன்று நடைபெற்றது. அங்கு அழகான சிறிய வெள்ளைப் பிள்ளையார் சிலை (Paper mould) ஒன்று இருந்தது. அதன் கலையழகு பாவேந் தரைப் பெரிதும் கவர்ந்தது. நீண்டநேரம் அதையே ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு என்னை நோக்கி, "நீ பூசை செய்வதுண்டா என்று கேட் டார். நான் இல்லை' என்று சொன்னேன். அதற்கு அவர், 'மனிதனுக்கு ஏதாவது ஒரு பிடிப்பு வேண்டும்” என்று சொன்னார்.