பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Đ முருகுசுந்தரம்/17

நான் ஒரு முறை பாவேந்தரோடு தங்கியிருந்தபோது முத்தமிழுக்கு என்ன சின்னம் (Symbol) போடலாம் என்று பேச்சு எங்களிடையே எழுந்தது. இயற்றமிழுக்குக் கிளியும். இசைத்தமிழுக்குக் குயிலும், நாடகத் தமிழுக்கு மயிலும் சின்னங்களாக இருக்கலாம் என்று முடிவு செய்தோம். பாவேந்தர் அம்முடிவை ஒருவெண்பாவாக எழுதிமுடித்தார். கீழ்க்கண்ட வெண்பா 1955-ஆம் ஆண்டு எழுதப்பட்டது.

பெற்ற தமிழகம் பெற்றது கைவிலங்கோ! அற்றதோ மேன்மை, அழகு தமிழ்?-சொற்கிளியும் ஆடல் மயிலும் இசைக்குயிலும் ஆட்சியம்பால் வாடல் தவிர்த்து வாழ்வோம்.

பெருங்கவிஞர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோரின் பேச்சும் போக்கும் சிலசமயங்களில் விபரீத மாக இருக்கும். ஏன் இவ்வாறு நடந்து கொள்ளுகிறார் கள் என்று நாம் சிந்தித்துப் பார்த்தாலும் நமக்கு உண்மை விளங்காது. சிறு குழந்தைகள் செய்யும் செயல்களை-அவை பொருளற்றவையாக இருப்பினும் - நாம் கண்டு மகிழ்ச்சி கொள்கிறோம் இல்லையா? அப்படி இவர்கள் செயலையும் நாம்கண்டு மகிழவேண்டி யது தான். பாவேந்தர் வாழ்க்கையில் இது போன்ற சுவையான செய்திகள் எத்தனையோ உண்டு.

கவி காளமேகம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம். பாவேந்தரும் அவர் பரிவாரமும் பா. வே. மாணிக்க நாயகர் பங்களாவில் முகாமிட்டிருந்தனர். ஒருநாள் பாவேந்தர் திடீரென்று எல்லாரையும் புறப் படுங்கள் என்று சொன்னார்; எல்லாரும் புறப்பட்டனர். பங்களா வாசலில் ஒரு டாக்சி வந்துநின்றது. எல்லாரை யும் ஏறுங்கள்’ என்று கட்டளையிட்டார். எல்லாரும் ஏறிக்கொண்டோம். பாவேந்தர் முன் இருக்கையில் காரோட்டிக் கருகில் அமர்ந்துகொண்டு 'போ' என்றார். வண்டி புறப்பட்டது.