பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t- முருகுசுந்தரம்/2!

சுவைப்பார் பாவேந்தர் என்பதற்கு இது சிறந்த எடுத் துக்காட்டு.

பாவேந்தருக்கு ஒவியம் தீட்ட வராது. ஆனால் ஓவியக் கலையில் நல்ல ஈடுபாடு உண்டு. ஒவியத்தைப் பற்றி அவர் கூறும் அபிப்பிராயம் சிறப்பாக இருக்கும். ஜனாதி பதி பரிசு பெற்ற திருவள்ளுவர் திருவுருவத்தை எழுதும் படி என்னை அடிக்கடி தூண்டி ஊக்கமளித்தவர் பாவேந் தரே. நான் திருவள்ளுவர் படத்தைத் தீட்டியபோது பாவேந்தர் அருகிலிருந்து கூர்ந்து கவனித்துக் கொண் டிருப்பார். "இப்படியிருந்தால் நன்றாக இருக்கும்’ என்று தம் அபிப்பிராயத்தைச் சொல்லிக் கொண்டிருப் பார். படம் ஓரளவு முற்றுப்பெறும் நிலையில் இருந்தது. அப்படத்தைப் பலரும் நடமாடுமிடத்தில் வைக்குமாறு எனக்குக் கூறினார். படம் போவோர் வருவோர் பார் வையில்பட்டு அவர்கள் கவனத்தைக் கவர்ந்தது. அதைப் பார்த்த எல்லாரும் என்ன? திருவள்ளுவர் படம் போல் இருக்கிறதே?' என்று கேட்டனர். பாவேந்தருக்கு பரம திருப்தி. 'சர்மா? படத்தை முடித்து விடு!" என்றார்; தானும் முடித்தேன். அப்படம் அச்சேறுவதற்கும் பாவேந்தரே துணை நின்றார். அப்படம் தமிழகத்தில் பெருத்த விளம்பரம் பெற்றதோடு எனக்குப் புகழையும். ஜனாதிபதி பரிசையும், செல்வத்தையும் வாரிவழங்கியது ஏன்? அப்படம்தான் இப்போது எனக்குச் சோறு போடு கிறது."

பாவேந்தருக்குப் பு து க் க வி ைத (Modern poem) பற்றியோ, புதிய ஓவியக்கலை (Modern Art) பற்றியோ தெரியாது. என்றாலும் புதிய ஓவியக்கலை பற்றி அவ ரிடம் ஒரு முறை பேசிக்கொண்டிருந்த போது மிக அழகாக ஒரு கருத்தை வெளியிட்டார்.

'மரம் அழுகிறது; கல்லும் கண்ணிர் வடிக்கிறது! என்று கவிதை எழுதுகிறோம். இதை எண்பிப்பது எப்படி? இதற்கு எப்படிப் படம் போடுவது?... இது பெரிய விஷ