பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28|குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

சாதாரணக் கழகத் தோழனிடத்திலும் பாவேந்தர் தந்தை போலப் பழகினார். 'பாரதிதாசன் கவிதை"த் தொகுப்பு எனக்குப் புத்துணர்ச்சி யூட்டும் அருமருந்து. எனக்குச் சோர்வு ஏற்படும் போதெல்லாம் அதை எடுத் துத் திருப்பித் திருப்பிப் படிப்பேன். புதுச்சேரிப்பக்கம் போனால் நான் அவரை வீடுதேடிச் சென்று பார்க்காமல் திரும்பமாட்டேன். தஞ்சாவூர்ப்பக்கம் வந்தால் என்னைப் பார்க்காமல் அவரும் போக மாட்டார்.

புதுச்சேரியில் கடல்மீனே தின்று பழக்கப்பட்ட அவருக் குக் குளத்துமீன் (வரால்) என்றால் உயிர். தஞ்சை வந் தால் வரால்மீன் பொரியலும் குழம்பும் அவர் இருப் பிடத்திற்கு- பெரும்பாலும் திராவிடர் கழகக் கட்டிடம் அல்லது அரசர் சத்திரத்தில் தங்குவார்- நான் கொடுத் தனுப்புவது வழக்கம்.

மரக்கறி உணவுக்காரரைக் கண்டால், மூன்று மூட்டைப் பருப்புத் தின்றால் முக்கால் அனாத் தங்கச்சத்து' என்று கேலி செய்வார். .

கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் ஒருமுறை பேசிய போது, " தெய்வந் தொழாள் கொழுநன் தொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" என்ற பாட்டுக்கு அவர் கூறிய புதிய விளக்கத்தைக் கேட்டு நான் மெய்சிலிர்த் துப் போனேன்.