பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D. முருகுசுந்தரம்/31

நாட்டுக்கு வரவழைத்துத் தருமபுரம் ஆதினம் தமிழ்க் கல்லூரியில் சேர்த்தவர் பாவேந்தரே.

தமிழ்ப்புலவர் கல்விபயின்றிருந்தாலும் எனக்குஆசிரியர் பணியில் ஈடுபாடு ஏற்படவில்லை. இசைத்துறையும் நாடகத்துறையும் என்னைப் பெரிதும் கவர்ந்த காரணத் தால், இசை நாடக அரங்குகளிலே என் பொழுதைக் கழித்தேன். பாவேந்தரைச் சந்திப்பதும், அவர் பாடல் களைப் பாடுவதும் என் இனிய பொழுது போக்கு. பாவேந்தரோடு கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் சென்று அவர் பாடலைப் பாடி மகிழ்விப்பது என் வழக்

&ID.

பாவேந்தருக்குப் புறாவின் இறைச்சி மிகவும் பிடிக்கும். இரவு நேரங்களில் மாயூரம் கோவில் கோபுரத்தின் மீது ஏறி அங்கு அடைந்திருக்கும் புறாக்களைப் பிடித்து ஒரு கூடையில் போட்டுத் திராவிடமணி என்ற தோழரிடம் கொடுத்துப் புதுவை அனுப்புவேன். ஒருமுறை நான் கொடுத்தனுப்பிய புறாக்கள் சற்று முற்றலானவை. நீ அனுப்பிய புறாக்களைப் பெற்றேன்; அத்துணையும் கிழங்கள்’ என்று அடுத்தநாள் பாவேந்தரிடமிருந்து கடிதம் வந்தது. உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் வெளிப்படுத்தும் அவர் பண்பு என்னை மிகவும் கவர்ந் தது.

செம்பனார் கோயிலில் ஒரு சீர்திருத்தத் திருமணத்துக் குப் பாவேந்தர் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருந் தார். மணமகனுடைய நண்பர் ஒருவர் தலைவராக இருந்த பாவேந்தரின் ஒப்புதலைப் பெறாமல் "வாழ்த் துப்பா ஒன்றைப் படிக்க வந்தார். 'என் இசைவு இல் லாமல் எள்ளும் அசையக்கூடாது. நல்லது கெட்டதுக்கு நான்தானே பொறுப்பு!" என்று சொல்லி வாழ்த்துப் பாவை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டார்.

இற்றைக்கு ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னர்