பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முருகுசுந்தாம் 35


காதிருக்கும் இந்தத் திரைப்பாட்டுக் காலத்தில், உன் வளரும் தமிழிசையை விடுத்துப் பாக்களத்தில் குதிக்கப் போகிறாயா? ஒரு துறையிலேனும் உருப்படியாகத் தேர்ச்சிகொள்; பிறகு பார்க்கலாம்' என்று கூறினார்.

ஊர் வந்ததும் என் அளவிட முடியாத உணர்ச்சி வெள்ளத்தில் எழுந்த ஒரு பாடலைப் பாவேந்தர்க்கு அனுப்பி வைத்தேன். அதிலிருந்த ஒருசில சொற்களை அகற்றி அதனை அழகுபடுத்தி எழுதியனுப்பி இருந்தார்கள்.

ஒரு முறை இரண்டுவரி கொண்ட ஒரு பாடலை எழுதி அதை என் கடிதத்தாளில் (Letter Pad) அச்சிட்டு முதன் முறையாக அதில் பாவேந்தருக்கு ஒரு கடிதம் எழுதி யிருந்தேன். அதற்குப் பாவேந்தரிடமிருந்து மறுமொழி வந்தது. என்ன?

" உன் அஞ்சல் நன்று; உடன் அத்துணை அச்சுப்படி களையும் எடுத்துவந்து சேருக’’ என்றிருந்தது.

எப்படி இருக்கும்! உடன் எல்லாக் கடிதத் தாளையும் கட்டிக்கொண்டு புதுவை போய்ச் சேர்ந்தேன். அப் போது அவர்கள் வீட்டில் இல்லை.பதிப்பகக்தில் இருப்பதாக அறிந்து அங்கு சென்றேன். ஒருவாறாக உள்ளத்தைத் தேற்றிக்கொண்டு எதிரில் போய் நின்றேன்.

  • வாரும். எல்லாரும் நலந்தானே?" என்றார் பாவேந் தர்.

'ஆம்! நலந்தான்!” எனறு கூறிக்கொண்டே, கொண்டு போன கடிதத்தாள் கட்டுகளை அவர்முன் வைத்தேன். அவருடைய பார்வை என்னை ஏதோ ஏசுவதாகப் பட் டது. மூக்கின் வழியாக வந்த சுருட்டுப் புகைச்சலோடு, அதோ அந்த மலையாளத்தான் கடைக்குப்போய் இரண்டு தேனிர் கொண்டுவரச் சொல்லிவாரும்' என்று கூறினார். அவ்வளவுதான். தேநீர்க் கடைக்குப்போய் வருவதற்குள் அவர் எதிரில் நான் வைத்திருந்த அத்