பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40/குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

வரும் என்னை விரும்பிக் கேட்டனர். சேலம் வருவதற்

குள் குறைந்தது பத்து முறையாவது அவர்களுக்கு இப் பாடலைப் பாடிக் காட்டியிருப்பேன்.

பாவேந்தர் புலால் உணவை விரும்பிச் சாப்பிடும் இயல் புடையவர். எப்போதும் தனியாக அமர்ந்துண்ணும் பழக்கம் இவருக்குக் கிடையாது: நண்பர்கள் குழாத் தோடு தான் சாப்பிடுவார். எது சாப்பிட்டாலும் ஒன்றே! மீனென்றால் மீன்; கறியென்றால் கறி. எதையும் நிறையச் சாப்பிடுவார். என்னப்பா! அள்ளிக் கிட்டு வா! வாரிக்கிட்டுவா!' என்று தான் உண்ணும் போது இவர் கட்டளையிடுவார். சேலத்தில் மாடர்ன் கேஃப் சிற்றுண்டியும், வில் வாத்திரிபவன் காஃபியும் இவருக்கு மிகவும் பிடிக்கும். இட்டிலி சாப்பிடும் போது எது இருந் தாலும் இல்லாவிட்டாலும் கரண்ட் சட்னி (காரமான புளி மிளகாய்ச் சட்னிக்குப் பாவேந்தர் வைத்த பெயர்) கட்டாயம் இவருக்கு வேண்டும். மூர்மார்க்கெட் பானு ரெஸ்டரண்டில் வான் கோழி பிரியாணி சாப்பிடுவார். ஆடு மனிதனுக்கு Substitute என்பார். ஆட்டின் எந்த உறுப்பை மனிதன் சாப்பிடுகிறானோ, அந்த உறுப்பு மனிதனுக்கு வலிமை பெறும் என்று கூறுவார்.

பாவேந்தர் சிறந்த சுவைஞர். ஓவியர்கள் ஸ்டுடியோ வில் படங்கள் எழுதுவதை எப்போதும் கண்கொட்டாமல் பார்த்தவண்ணம் உட்கார்ந்திருப்பார். முழங்கையைத் தலையணையில் ஊன்றிய வண்ணம் ஊம்.எழுதிக்க' என்பார்; நாங்கள் எழுதுவோம்.

பாவேந்தர் பெரிய பொதுவுடைமை வாதி. கையில் காசி ருந்தால் கேட்பவர்க்கெல்லாம் கொடுத்து விடுவார். ஒருமுறை சேலம் மார்டன் தியேட்டர்ஸ் உரிமையாளர் தமது படத்துக்கு பாட்டெழுதியதற்காக ரூ. 4000/பாவேந்தருக்குக் கொடுத்தார். அப்பணத்தில் நூறு ரூபாயைத் தமது பணியாளனிடம் கொடுத்து இந்தா! இதை இன்னக்குச்செலவுக்கு வெச்சுக்க, மீதி கொண்டா