பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46/குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

றுள்ளது. படித்தவுடன் உள்ளத்துக்கு உணர்ச்சியூட்டி நம்மைச் சுவை மயக்கத்தில் ஆழ்த்தும் கற்பனை வளம் பெற்ற பாடல் அது. எத்தனை முறைபடித்தாலும் சலிப் புணர்ச்சி தோன்றாது. அப்பாடல் பாவேந்தருக்கும் எனக்கும் இடையே விளங்கிய நட்புக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

எனக்கும் பாவேந்தருக்கும் கி.பி. 1944ஆம் ஆண்டு வாக்கில் முதன் முதலாகத் தொடர்பு ஏற்பட்டது. எனக்குச் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த பிரபந்தக் கவி ஞர்களிடமும், அவர்கள் படைப்புக்களிடமும் பற்றும் ஈடு பாடும் அதிகம். உடுமலை முத்துசாமிக் கவிராயரின் பழக்கமும், அவர் எழுதியுள்ள இராமாயணக் கீர்த்தனை களில் நல்ல பயிற்சியும் எனக்குண்டு. யமகம், திரிபு. சிலேடை, சந்தம் ஆகிய சொல் விளையாட்டுக்களில் வியப்பும் விருப்பும் எனக்குண்டு. இந்த நூற்றாண்டில் வாழ்ந்த பாரதி, பாரதிதாசன் பாடல்களை நான் அவ் வளவாக மதித்ததில்லை. புரியும்படி எளிய சொற்க ளால் எழுதப்பட்ட இவர்கள் பாடலை வெள்ளைப்பாடல் கள் என்றுவெறுத்து ஒதுக்குவது என்வழக்கம். பாவேந் தரைச் சந்தித்தபோது எனக்கு முப்பது வயதிருக்கும்: சேலம் மாடர்ன்தியேட்டர்ஸில் கதை இலாகாவில் நல்ல சம்பளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

பாவேந்தரின் இன்ப இரவு நாடகம் சேலம் சென்ட்ரல் டாக்கீசில் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். பாவேந் தர் ஒரு நாள் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவுக்கு வந்தார். 'என்னுடைய கவிதை நூல்களைப் படித்திருக் கிறாயா?" என்று என்னைக் கேட்டார். நான் அவர் கவிதை நூல்களைக் கண்ணால் கூடப்பார்த்ததில்லை. என்றாலும் சிலவற்றைப் படித்திருப்பதாகத் தலை யசைத்தேன். மாடர்ன் தியேட்டர்ஸ் அலுவலகத்திலி ருந்து அப்போது வெளியாகிக் கொண்டிருந்த சண்ட மாருதம்' என்ற சினிமாப்பத்திரிகை என் பொறுப்பில்