பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D. முருகுசுந்தரம்/47

இருந்தது. அப்பத்திரிகையில் வெளியிட ஒரு பாடல் தரும்படி அவரைக் கேட்டுவைத்தேன். அடுத்தநாளே "அவள் மேல் பழி' என்ற பாடலை எழுதி என்னிடம் கொடுத்தார். அதைப்படித்ததும் பாவேந்தர் மீது அளவு கடந்த மதிப்பும், அவர் ஆற்றல் மீது அளவு கடந்த மரி யாதையும் என் உள்ளத்தில் ஏற்பட்டன. அவர் பாடல் களை விரும்பி வாங்கிச் சண்டமாருதத்தில் தொடர்ந்து வெளியிட்டேன்.

1945ஆம் ஆண்டிலிருந்து சேலம் மாடர்ன் தியேட்டர் ஸ்ாக்கும் பாவேந்தருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற் பட்டது. அபூர்வசிந்தாமணி, சுபத்ரா, சுலோசனா, பொன்முடி, வளையாபதி ஆகிய படங்களுக்குக் கதை வசனம் பாடல் எழுதினார். அவருடைய காதல் காப்பிய மான எதிர்பாராத முத்தம், பொன்முடி என்ற பெயரில் திரைப்படமாவற்குத் துணையாக இருந்தவன் நான்.

"பூரீ ஆண்டாள்" என்ற திரைப்படத்தை நான் எடுத் தேன். அப்போது சுத்தானந்த பாரதியார் பத்திரிகை கள் மூலமாக மிக்க விளம்பரம் பெற்றிருந்த காரணத் தால், அவரை அப்படத்திற்குப் பாட்டு எழுதக் கேட்டுக் கொள்வதற்காக நான் புதுச்சேரி சென்றேன். சுத்தா னந்தபாரதியார் அப்போது அரவிந்தஆசிரமத்தில் தங்கி யிருந்தார். அவருடைய கீர்த்தனைகள் சில அப்போது இசையுலகில் எல்லாராலும் பாடப்பட்டு மிக்க விளம் பரம் பெற்றிருந்தன. ஆண்டாள் படத்துக்குச் சில பாடல்கள் எழுதித் தரும்படி அவரை நான் கேட்டேன். 150 பாடல்கள் அடங்கிய ஒரு காகிதக்கட்டை என் முன் னால் எடுத்துப் போட்டு இவற்றிலிருந்து தேவையான வற்றைப் பொறுக்கிக் கொண்டு போ' என்று சொன் னார். மூன்றுபாட்டை எடுத்துக் கொண்டு அதற்குரிய தொகையை அவருக்குக் கொடுத்துவிட்டு வெளியில் வந் தேன் .

புதுச்சேரி வந்துவிட்டுப் பாவேந்தரைப் பார்க்காமல்