பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52|குயில் கூவிக்கொண்டிருக்கம் <!

என்று சத்தம் போட்டார். அதற்குப் பிறகு பாவேந்த ருக்கும் டி.ஆர்.எஸ்ஸுக்கும் ஒத்துவரவில்லை. தமது விருப்பத்துக்கு மாறாக யார் நடந்து கொண்டாலும் டி.ஆர்.எஸ். ஸ்டுடியோவுக்குள் வைத்துக்கொள்ள மாட் டார். தமது விருப்பத்துக்கு மாறாக எது நடந்தாலும் பாவேந்தர் அங்கு இருக்க மாட்டார். எனவே பாவேந்தர் பாண்டி திரும்பினார். அதன் பிறகு மாடர்ன் தியேட் டர்ஸ்-க்குள் அவர் காலடி எடுத்து வைக்கவில்லை.

ஏழெட்டு ஆண்டுகள் கழித்துச் சென்னையிலிருந்து எனக் குப் பாவேந்தர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவரு டைய பாண்டியன் பரிசின் காப்பியத் தலைவனான வேல்ன் பாத்திரத்துக்கு நான் ஏற்கனவே ட்ரீட் மெண்ட் எழுதியிருந்தேன். சேலத்தில் இருந்த போதே அதை அவரிடம் காட்டினேன். இதைப்படமாக சுந்த ாம் எடுத்தால் எடுக்கட்டும்; இல்லாவிட்டால் கிடக்கட் டும். வை பார்க்கலாம்' என்று அப்போது கூறிவிட்டார்.

இப்போது அந்த ட்ரீட்மெண்டை எடுத்துக் கொண்டு. எழும்பூர் விக்டோரியா ஹோட்டலுக்கு உடனே வரும் படி கடிதம் எழுதியிருந்தார்; நானும் அவ்வாறே சென் றேன். என்னைச் சந்தித்ததும் படத்துக்கு யார் யாரைப் போடலாம் என்று கேட்டார். காப்பியத் தலைவன் வேலன் பாத்திரத்திற்கு சிவாஜியைப் போடலாம் என் றேன்; அவர் சற்றுத் தயங்கினார். படத்துக்கு ஸ்டார் வேல்யூதேவை என்று நான்வற்புறுத்தினேன். உடனே அப்போது முதலமைச்சராக இருந்த காமராசரைத் தொலை பேசியில் கூப்பிட்டுத் தம் படத்தில் நடிக்கும்படி சிவாஜிக்குச் சொல்லும்படி கேட்டுக் கொண்டார். காம ராசரும் உடனே சிவாஜிக்குத் தொலைபேசியில் அக் கருத்தைத் தெரிவித்தார். சிவாஜியும் ஒப்புக் கொண்

டார்.

அடுத்த நாள் காலை பாவேந்தர், முருகதாசா, நான் ஆகிய மூவரும் சிவாஜியின் வீட்டுக்குப் போனோம்.