பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

p முருகுசுந்தரம்/53 அங்கு எங்களுக்கு நல்லவரவேற்பு கிடைத்தது. பாண்டி

யன் பரிசுக் கதையைப் பற்றிப் பாவேந்தர் சொன்னார். "நான் பல முறை படித்திருக்கிறேன்; நானே வேலன் பாத்திரத்தில் நடிக்கிறேன். நாளைக்குப் பேசுவோம்" என்று கூறிச் சிவாஜி எழுந்தார். நாங்களும் விடுதி அறைக்குத் திரும்பினோம். சிவாஜி, நாளைக்குன்னு ஏ சொன்னா...? என்று கேட்டார் பாவேந்தர். நாங்கள் தெரியவில்லை’ என்றோம்.

அடுத்த நாள் பாவேந்தர் தனியாகவே சிவாஜியின் வீட்டுக்குச் சென்றார். சிவாஜி அவரைப் பார்த்து, "வசனம் பாட்டு எல்லாம் நீங்களே எழுதுங்கள். மற்ற படி டைரக்ஷன், இசையமைப்பு, ஒளிப்பதிவு ஆகியவற் றுக் கெல்லர்ம் நான் சொல்லுபவர்களைத்தான் போட வேண்டும்” என்று கூறினாராம். பாவேந்தர் ஏன்?" என்று கேட்டிருக்கிறார்.

'எல்லாருமே என்னிடத்தில் இருக்கிருர்கள் . வேறு டைரக்டர்களைப் போட்டால் அவர்கள் என்ன நினைக்கி ருர்களோ,அதன்படி என்னை நடிக்கச் சொல்லுவார்கள். ஆனால் நான் எப்படி நடிக்கிறேனோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் டைரக்டர் தான் எனக்கு வேண்டும். ஆகையால் பீம்சிங்கைப் போடுங்கள்!' என்று சிவாஜி சொன்னாராம். சரி பார்க்கலாம்!' என்று சொல்லி விட்டுப் பாவேந்தர் எழுந்து வந்து விட்டார்.

அன்றைக்கு அவர் திரும்பியபோது அவர் நல்ல மன நிலையில் இல்லை. வழக்கத்துக்குச் சற்று அதிகமாகவே மதுவருந்தினார். 'அவன் என்ன பெரிய நடிக...! அவன் நடிக்காட்டி என்ன?’ என்று வருத்தத்தோடும் கோபத தோடும் பேசினார். நானும் முருகதாசாவும் அவரைச் சமாதானப்படுத்தி பீம்சிங்கையே டைரக்டராகப் போடும்படி சொன்னோம். அவரும் ஒப்புக் கொண்டார்.

பீம்சிங் அப்போது சுறுசுறுப்பான டைரக்டர்களுள் ஒரு