பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யில் செத்தவன். ஷெல்லி கடற்புயலில் சிக்கி மாண்டவன்; லார்கா அரசியல் புயலில் சிக்கி மாண்டவன். மாய கோவ்ஸ்கி தற்கொலை யால் முடிந்தவன்; எஸ்ரா பவுண்ட் பயித்தி யத்தால் மடிந்தவன். பிரெஞ்சுப் பெருங் கவிஞன் ஃப்ராங்காயிஸ் கொள்ளைக் கார னாகவே வாழ்ந்து வாழ்வை முடித்துக் கொண்டவன். சிலி நாட்டுப் பெருங் கவிஞன் பாபுலோ நெருடா தன் கால்களாலும் கவிதை யாலும் உலகை அளந்தவன். ஒவ்வொரு கவிஞனின் வாழ்க்கையும் உள்ளத்தை நெரு டும் ஓர் உணர்ச்சிக் காவியம்.

கவிஞன் வாழ்க்கையைச் சர்க்கரைப் பொங் கலுக்கு ஒப்பிடலாம். சர்க்கரைப் பொங்க லில் முந்திரிப் பருப்பு அங்கொன்றும் இங் கொன்றுமாகக் கிடப்பது போல், கவிஞர்கள் வாழ்க்கையிலும் சுவையான நிகழ்ச்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தட்டுப் படுவதுண்டு. ஆனால் ப ா வே ந் த ரி ன் வாழ்க்கை முழுவதும், உண்பவர் வாயில் மொருமொருவென்று உதிரும் வறுத்த முந் திரிப்பருப்பு. சுவையில்லாத நிகழ்ச்சியே அவர் வாழ்க்கையில் இல்லை என்று சொல்லலாம்.

பாவேந்தர் வாழ்க்கையில் வெளிவராத செய்திகள் நிறைய உள்ளன. மேலை நாட் டுக் கவிஞர்கள் தங்கள் காதல் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி கூச்சமின்றி அவர்களே எழுதியிருக்கிறார்கள்; பிறரையும் எழுத அனு மதிக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டின் நிலை வேறு. நமது நாட்டில் தமது காதல் வாழ்க்கையை ஒளிக்காமல் துணிச்சலாக எழுதும் ஒரே கவிஞர் கண்ணதாசனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?பாவேந் தருடைய காதல் வாழ்க்கையும் சுவையானது தான். ஆனால் நான் அதில் கை வைக்க வில்லை. சரியான முறையில் ஆங்கிலத்தில்