பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60/குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

வனாக இருந்தபோது சமதரும வாதிகளான என்.ஜி. ராமசாமி, ரமணி ஆகியோரின் தொடர்பு ஏற்பட்டது. Gääu surgóluff &#1&th (National Youth league) stair பதைத் துவக்கி இளைஞர் அணியைத் திரட்டினேன். பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்திலும் பங்குபெற்றுப் பணியாற்றினேன். பின்னர் இச்சங்கங்கள் திரு வி.வி.கிரி தலைமையில் இயங்கிய ஏ.ஐ.டி.யூ.சி. யோடு இணைந் தன.

1942-இல் நடைபெற்ற ஆகஸ்டுப் போராட்டத் தில் பங்கு கொண்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப் பட்டேன். பள்ளி கொண்டான் சாம்பசிவம் ஆசாரி, ஈரோடு கோவிந்தசாமி ஆகிய இருவரும் என்னோடு ஒன்றாகச் சிறையில் இருந்தவர்கள். ஈரோடு கோவிந்த சாமி பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களை இசையோடு பாடுவார். சாம்பசிவம் அப்பாடலுக்கு விளக்கம் கூறு வார். இதனால் பாவேந்தர் பாடல்களில் எனக்கு ஈடு பாடு ஏற்பட்டது. சிறையிலிருந்து வெளிவந்ததும் முதல் வேலையாகப் பாரதிதாசன் கவிதைகள்' முதல் தொகுதியொன்றை வாங்கிக்கொண்டு நேராகப் புதுச் சேரி புறப்பட்டேன்.

புதுவையில் கால்வைத்ததும் புரட்சிக் கவிஞர் வீடு' எது வென்று கேட்டேன். யாருக்கும் தெரியவில்லை. நீண்ட நேரம் சுற்றியலைந்த பிறகு எதிரில் வந்த ஒருவரை அணுகி விளக்கமாகக் கூறிக் கேட்ட போது ஓ! வாத்தி யார் வீடா?’ என்று சொல்லிப் பெருமாள் கோவில் தெரு வைக் காட்டினார். தாடி, மீசை, கதர்ச் சட்டை, கதர்ப் பை ஆகிய சிறைக் கோலத்தோடு பாவேந்தர் எதிரில் போய்நின்றேன். அப்போது ஏ.கே.செட்டியார், முல்லை முத்தையா ஆகியோர் பாவேந்தருடன் பேசிக் கொண் டிருந்தனர். நான் நின்று கொண்டிருந்தேன்.

தமது பேச்சைச் சாவகாசமாக முடிததுவிட்டு என் பக்கம் திரும்பி யார் நீ? என்ன வேணும்?' என்று கேட்டார்.