பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62|குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

போது வந்தாலும் எனக்குக் கடிதம் எழுதுவார். நான் சென்று அவரோடு இருப்பது வழக்கம். என்னைப் பார்க்காமல் செல்லமாட்டார். "பாவேந்தர் பக்தி' என்னை ஆட்கொண்டது.

ராஜபாளையத்தில் பாவேந்தர் மீது பற்றுக் கொண்ட ஓர் இளைஞர் அணியைத் திரட்டினேன். பாவேந்த ருக்கு ஒரு விழா எடுத்து அவருக்குப் பண முடிப்பு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டேன். விழாவுக்கு ஒரு நாள் குறிப்பிட்டு அறிஞர் அண்ணாவையும், எழுத்தா ளர் வ. ரா. வையும் அழைக்க முடிவு செய்தேன். அண்ணாவைச் சந்திக்கச் சென்னை புறப்பட்டேன். முல்லை முத்தையா அண்ணாவுக்குக் கடிதம் கொடுத் தார். கடிதத்தை எடுத்துக்கொண்டு அண்ணாவை பண்ருட்டியில் சந்தித்தேன். அண்ணா ஒத்துக்கொண் டார். வ. ரா. வைச் சந்தித்துக் கேட்டதும் அவரும் ஒத்துக்கொண்டார்.

விழாவுக்கு வேண்டிய ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கி னேன். விழா இராஜபாளையம் வடிவேல் ரைஸ்மில்லில் நடைபெற்றது. விழாவில் அறிஞர் அண்ணா, கவிஞர் வாணிதாசன், முருகையன், பாவலர் பாலசுந்தரம் ஆகி யோர் கலந்து கொண்டனர். ஆஸ்த்துமாத் தொல்லை யால் வ. ரா. வரவில்லை. பாவேந் தருக்குப் பொன் னாடை போர்த்தி ரூ. 2000/- பணமுடிப்பும் வழங்கப்பட் டது. விழா முடிவுற்றதும் நான் ராஜபாளையத்திலிருந்து மதுரைக்குக் குடிபெயர்ந்தேன்.

மதுரையிலும் பாவேந்தர் பணியைத் தொடர்ந்து செய்ய விரும்பிப் பாரதிதாசன் மன்றம்' என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினேன். அம்மன்றத்தின் சார் பில் திருக்குறள் வகுப்பு தொடங்கப்பட்டது. திருக்குறள் வகுப்பு யூனியன் கிறிஸ்டியன் ஹைஸ்கூலில் நடை பெற்றது. திருக்குறள் வகுப்பு நடைபெறத் தமிழாசிரி யர் இராமையாப்பிள்ளை துணைபுரிந்தார். திருக்குறள்