பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. முருகுசுந்தரம்/63

வகுப்புக்கு ஒருவாரம் நாவலர் சோமசுந்தர பாரதி தலைமை தாங்கினார். மூன்று நாள் பேராசிரியர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். பத்து நாள் பாவேந்தர் தொடர்ந்து பேசினார். பாவேந்தர் பேச் சைக்கேட்க மக்கள் திரண்டு வந்தனர்; பெருங்கூட்டம்.

பாவேந்தர் திருக்குறளுக்கு அப்போது புத்துரை எழுதிக் கொண்டிருந்த நேரம். தலைமை தாங்கிய நாவலர் சோமசுந்தரபாரதியாருக்கும், பாவேந்தருக்கும் தெய் வந்தொழாஅள்’ என்ற திருக்குறள் உரையில் கருத்து வேறுபாடு தோன்றியது. இருவருமே விட்டுக் கொடுக் காத கொள்கை வாதிகள். நாவலர் அக்கருத்து வேறு பாட்டுக்குப் பிறகு திருக்குறள் வகுப்புக்கு வரவில்லை. தமிழக அளவில் பாவேந்தருடைய அன்பர்களைத்திரட்டி மதுரையில் அவருக்கு மணிவிழா எடுக்கப் பாரதிதாசன் மன்றத்தில் முடிவு செய்தோம். டவுன்ஹாலில் மணி விழாவுக்கு அமைப்புக்குழு கூடியது. கீழ்க்கண்டவர்கள் மணிவிழாப் பொறுப்பாளர்களாக இருக்க அவ்வமைப்புக் குழு முடிவு செய்தது.

தலைவர்: நாவலர் சோமசுந்தர பாரதியார். துணைத்தலைவர்கள்: ம.பொ.சி, ஜீவானந்தம், நாரண. துரைக்கண்ணன், கல்கி பொதுச் செயலாளர்: தனுஷ்கோடி ராஜா துணைச்செயலாளர்கள்: நாவலர் நெடுஞ்செழியன், பொன்னி ஆசிரியர் முருகுசுப்பிரமணியம். பொருளாளர்: அறிஞர் அண்ணா.

பிறகு திரைப்பட நடிகர் யதார்த்தம் பொன்னுசாமியின் தலையீட்டால் மணிவிழாக் குழு திருச்சிராப்பள்ளிக்கு மாற்றப்பட்டது. திருச்சிராப்பள்ளியில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் வேறொரு மணிவிழாக்குழு அமைக்கப்பட்டது. கவிஞர் திருலோக சீதாராம், அ.வெ.ர. கிருஷ்ணசாமி செட்டியார், ராம. சுப்பையா, காதல் அரு. ராமநாதன் ஆகியோர் அக்