பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64/குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

குழுவில் இடம் பெற்றனர். நானும் திருச்சி சென்று மணிவிழாப் பணியில் ஈடுபட்டேன். தமிழ்நாடு காங்கி ரஸ் தலைவர் கிருஷ்ணசாமி நாயுடுவின் மகன் பூரீராமு லுக்குப் பாவேந்தரிடத்தில் நல்ல ஈடுபாடு உண்டு. அவர் நன்கொடையாக ரூ. 500/- முதலில் கொடுத்தார். மலேயாத் தமிழ் முரசு ஆசிரியர் சாரங்கபாணி ரூ 200/நன்கொடை வழங்கினார். ஆனால் அவ்விழா முயற்சி குழப்பத்தில் முடிந்து அரைகுறையாகத் திருவானைக் காவலில் ஒரு சத்திரத்தில் நடைபெற்றது.

திருவானைக்காவலில் மணிவிழா நடந்த போது திரு. குமாரசாமிராஜா தமிழகத்தின் முதலமைச்சராக இருந் தார். மணிவிழா அழைப்பு அவருக்கும் அனுப்பப்பட் டது; வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். ஒருமுறை குமாரசாமி ராஜா அவர்களை நான் சந்தித்த போது பாவேந்தரைப் பற்றிப் பேச்செழுந்தது. பாவேந்தரைப் பற்றி அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.

"நான் அவர் கவிதைகளைப் படித்திருக்கிறேன். குறிப் பாக அவர் எழுதியுள்ள அழகின் சிரிப்பு' என் உள்ளத் தைப்பெரிதும் கவர்ந்தது. அவருக்கு ஆங்கிலம் தெரி யாத குறை; தெரிந்திருந்தால் நோபிள் பரிசு கிடைத் திருக்கும். பாரதி சிறந்த தேசிய கவி என்பதில் ஐய மில்லை. ஆனால் இளங்கோ கம்பருக்குப் பிறகு பாரதி தாசன்தான். சென்னை வந்தால் ஒருமுறை அழைத்து வா!' - என்றார்.

திரு.குமாரசாமிராஜா கூறியதை அடுத்தமுறை சந்தித்த போது பாவேந்தரிடம் கூறினேன். சென்னையில் இருக் கும் போது பாவேந்தரும் நானும் குமாரசாமிராஜாவை ஒருநாள் சென்று பார்த்தோம். அப்போது ஜெயின் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந் தார். பாவேந்தரைக் கண்டதும் கட்டித்தழுவிக் கொண் டார். கல்லூரி நிகழ்ச்சியைச் சற்று நேரம் ஒத்திவைக்