பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76'குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

பாய்மரம் உடைந்த மரக்கலம் போல் வாழ்க்கை அலை மலையில் திக்குத் தெரியாமல் மிதந்து கொண்டிருந்த என்னைச் சுயமரியாதைத் தென்றல், ஈரோடு நாகம் மாள் காலனித் துறைமுகத்தில் கொண்டுவந்து சேர்த் தது. சமுதாயக் கொடுமைகளால் நைந்து போயிருந்த எனக்குச் சுயமரியாதை இயக்கம் ஏற்ற புகலிடமாய் அமைந்தது. ஒரு பெண் தன்மதிப்போடும் பாதுகாப் போடும் வாழ நாகம்மாள் காலனியைவிட ஏற்ற இடம் வேறு எதுவுமில்லை என்பதை உணர்ந்தேன். சுய மரியாதை இயக்கப் பணியில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். பெரியாரோடு நானும் கூட் டங்களுக்குப் போவேன். 'பாரதிதாசன் பாட்டைப் பாடு' என்று ஐயா கட்டளையிடுவார்கள். இனிய குரல் வளம் பெற்றிருந்த நான் பாவேந்தர் பாடல்களைக் கணிரென்று மேடையில் பாடுவேன். அப்போது நான் பாடிய பாடல்களுள் 'கண்கள் நமக்குண்டு' என்று தொடங்கும் பாடல் எனக்கு மிகவும் விருப்பமான பாடல். ஒவ்வொரு மேடையிலும் நான் அதைத் தவ ருமல் பாடுவேன்.

நீதிக்கட்சி தேர்தல் பிரசாரம் முடிந்து பெரியார் ஈ..ெ வ ரா. கொடைக்கானலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந் தார். நானும், பூவாளுர் பொன்னம்பலனாரும், வேறு சில இயக்கத் தொண்டர்களும் கானாடுகாத்தான் வை சு. சண்முகஞ் செட்டியார் இல்லத்தில் ஒய்வெடுத் துக்கொண்டிருந்தோம்.

அந்தக் காலத்தில் வை. சு. சண்முகம் செட்டியாரைச் செட்டிநாட்டில் ராஜா சர் அண்ணாமலை செட்டியா ருக்கு அடுத்த செல்வராகச் சொல்லலாம். மலேசியா விலும், சிங்கப்பூரிலும் அவருக்குப் பல கடைகள் இருந்

! கைம்மைக்கொடுமை - என்பது பாடலின் தலைப்பு. பாரதி

தாசன் கவிதைகள் முதல் தொகுதியில் உள்ளது.