பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D. முருகுசுந்தரம்/77

தன. மலேயா வத்துப்பகாரில் 2000 ஏக்கர் பரப்புள்ள ரப்பர்த் தோட்டம் அவருக்குச் சொந்தமாக இருந்தது. கானாடுகாத்தானில் அவருக்குப் பெரிய வளமான (Bangalow) இருந்தது. அதற்கு 'இன்பமாளிகை' என்பது பெயர். அம்மாளிகையின் நடுவில் ஒரு பெரிய கூடம் உண்டு. அக்கூடத்தில் மிகப் பெரிய நிலைக் கண்ணாடி மாட்டப்பட்டிருக்கும். அக்கண்ணாடியின் எதிரில் ஒர் ஊஞ்சல் போடப்பட்டிருக்கும். அவ் ஊஞ்ச லில் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் அமர்ந்து கொண்டு பாண்டியா!' என்று வை. சு.ச. வைக் கூப்பிடு வாராம். பாரதியார் புதுவையிலிருந்து மீண்டுவந்து கடையத்தில் தங்கியிருந்தபோது மிகவும் வறுமையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். வை. சு.ச. அப்போது பாரதியாருக்குத் திங்கள் தோறும் ரூ. 40/- தவறாமல் அனுப்பிக்கொண்டிருந்தாராம். வை. சு.சா. மீது பாரதி யார் ஒரு பாடலும் எழுதியிருக்கிறார்.

வை.சு.ச. சுயமரியாதை இயக்கத்தின் பொருளாளர். சு. ம. தொண்டர்கள் தெற்கு மாநிலங்களுக்குப் பிர சாரத்துக்குப் போனால் கானாடு காத்தான் இன்பமாளி கையில் தான் பொதுவாகத் தங்குவது வழக்கம். அது தான் அப்போது எங்கள் தெற்குக் கேந்திரம். வை. சு.ச. இளமையில் தேசியவாதி. காந்தியார் தென்னாடு வந்தபோது இன்ப மாளிகையில் இரண்டுமுறை தங்கி யிருக்கிறார். காந்தியார் ஒருமுறை கூட்டத்தில் ஏலம் விட்ட1 கெஜம் கதர்த்துணியை ரூ. 10,000 கொடுத்து வாங்கினார். இன்ப மாளிகையில் இரண்டு கார்கள்

1 திருமதி மஞ்சுளாபாயைச் சந்தித்துப் பாவேந்தர் பற்றிய குறிப்பு களைக் கேட்டுக்கொண்டு கானாடுகாத்தானை விட்டுப் புறப் படும் நேரத்தில் வரலாற்றுப் புகழ்பெற்ற அந்த இன்பமாளிகை இருந்த இடத்தைக் காணச் சென்றேன். அங்கு ஒரு மண்மேடு மட்டும் இருந்தது. அக்காட்சி என் இதயத்தைச் சுட்டது -முருகு.