பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் தமிழ்ப்பண்பாடும் கலந்து செழித்த மண். அம்மண்ணுக்கே உரித்தான சில பழக்க வழக்கங்களும், பண்பாடுகளும், சொற்களும் தொடர்களும் குடும்ப விளக்கிலும் பிற காப்பி யங்களிலும் மலிந்து காணப்படுகின்றன. புதுவுைப் பண்பாட்டில் ஊறிய தமிழறிஞர் கள் அப்பண்பாட்டின் அடிப்படையில் அவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.

பாரதியின் கவிதைத்தாக்கத்தாலும்,பாவேத் தரின் கவிதைத் தாக்கத்தாலும் பாட்டுத் தமிழ் இந்த நூற்றாண்டில் இரு முறை மாற் றம் அடைந்துள்ளது. பாவேந்தர் தமிழுக்குப் பல புதிய சொற்களையும் படைத்துக் கொடுத்திருக்கிறார். மொழியியல் வல்லுநர் கள் இதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுப் புரட்சி உலகத்திற்குப் பிரகடனப் படுத்திய சுதந் தரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற கொள்கைகளின் பாதிப்புகள் இவருடைய துவக்ககாலப் படைப்புகளில் அதிகம் காணப் படுகின்றன. பாவேந்தர் கூறும் பொதுவுடை மைக் கருத்துக்கும். இன்றைய கட்சிப்பொது வுடைமைக் கருத்துக்கும் வேறுபாடுகள் உண்டு. அரசியல் அடிப்படையில் இதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

சங்க காலத் தொட்டு இன்று வரை மொழி யையே பாடு பொருளாக (Theme) வைத் துப் பாட்டிலக்கியம் படைத்து அதில் வெற்றி கண்ட கவிஞர் பாவேந்தரைத் தவிர வேறு யாருமில்லை; மொழியை ஆற்றல் மிக்க பிரச் சார பீரங்கியாகப் பயன்படுத்தி வெற்றி கண் டவரும் இவரே! இவர் எழுப்பிய மொழி யுணர்ச்சிதான் இன்றைய தமிழக அரசி யலுக்கு உயிர்ச்சத்தாகவும் ஊட்டச்சத்தாக