பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86|குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

பொழிவாற்றுவதற்காக வந்தார். அம்மன்றத்தில் நான் ஓர் உறுப்பினன். அப்போது ஏற்பட்ட தொடர்பு அவர் இறக்கும் வரையில் நீடித்தது. மதுரை வந்தால் வழக்கமாக சங்கர் 8 கோ மருந்துக் கடை மாடியில் தங்குவார். என் பேரில் அவருக்கு ஓர் ஈடுபாடு. மதுரையில் தங்கும் போது என்னை வந்து பார்ப்பார்: அடிக்கடி வெளியே கூட்டிக் கொண்டு போவார். மதுரையிலும் திருச்சிராப்பள்ளியிலும் மேற் கொண்ட மணிவிழா முயற்சிகளில் எனக்கும் பங்குண்டு.

1953 ஆண்டு ஏப்ரல் திங்கள் 5ஆம் நாள் எனக்குத் திருமணம். காதல் மணம்; கலப்பு மணம். டாக்டர் மு. வரதராசனார் தலைமையில் திருமணத்தை நடத்த விரும்பினேன். அப்போது மு.வ. வயிற்று வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காரணத்தால் அ.கி. பரந்தாமனார் தலைமையில் நடத்திக் கொள்ளும்படி கூறிவிட்டார். ஆனால் மதுரை முத்துவும், தங்கப்பழ மும், பாரதிதாசன் தலைமைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறினர். பாவேந்தரும் தலைமைதாங்க ஒத்துக் கொண் டார். திருமணம் இனிது நடைபெற்றது. திருமணம் முடிந்த அடுத்த நாள் மணமக்களாகிய எங்களை மதுரை முத்து தமது இல்லத்துக்கு அழைத்துச் சென்றார்.

1957 ஆம் ஆண்டு 'பாரதி புத்தக நிலையம்" என்ற பெயரில் புத்தகக் கடை ஒன்று துவக்கினேன். அத்திறப்பு விழாவுக்குத் தலைவர் பாவேந்தர். திறப்பாளர் முத் தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம். திருச்சி மணி விழாவின் போது பாவேந்தருக்கும், கி. ஆ. பெ. அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது. அக் கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த அவர் கள் என் கடை திறப்பு விழாவில் மீண்டும் கூடினர். திறப்பு விழாமுடிந்ததும் ரீகல் டாக்கீசில் இரண்டுபேரும் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினர். அகலாது அணு காது தீக்காய்வார் போல்க-என்பது முத்தமிழ்க் காவ லர் தலைப்பு. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’