பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90/குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

பாவேந்தரின் மகன் கோபதி (மன்னர் மன்னன்)யின் திருமணம். நான் குடும்பத்தோடு திருமணத்துக்குப் புதுவை சென்றேன். எனக்கு வேட்டி சட்டையும், என் மனைவிக்கு வெல்வெட் பையும் கொடுத்தார். நான் திரு மணத்துக்குப் பட்டிவீரன்பட்டி மலைப்பழம் வாங்கிச் சென்றேன். சேலம் நண்பர் ஒருவர் குண்டுமாம்பழம் வாங்கி வந்தார், பண்ருட்டி நண்பர் ஒருவர் பலாப்பழம் வாங்கி வந்தார். காலையில் சுவையான சர்க்கரைப் பொங்கலும் பழமும் சிற்றுண்டியோடு வழங்கப்பட்டது. காலை 10 மணிக்கு பந்தலில் அமர்ந்திருந்த நண்பர் களுக்குப் பாதாம்கீர் வழங்கப்பட்டது. பாவேந்தர் சமை யற்காரனைக் கூப்பிட்டு "எல்லோருக்கும் முட்டை ஆம்லேட் போட்டுக்கொடு... இல்லை அவிச்சுக்கொடு’ என்று கட்டளையிட்டார். திருமண வீட்டில் முட்டை ஆம்லட்டா! சமையல்காரன் திருதிருவென்று விழித் தான். செய்தி பெண்கள் கூட்டத்துக்கு எட்டியது. மூத்த மகள் சரசுவதி ஓடி வந்தாள். என்னப்பா திரு மண வீட்ல இப்ப யாராவது முட்டை சாப்பிடுவாங் களா?’ என்று கேட்டாள். ஏ. சாப்பிட்டா என்ன? எனக்கு வேணும்! சாஸ்திரமா பேசற சாஸ்திரம்..." என்று சத்தமிட்டார். அவருக்கு மட்டும் முட்டை அவித் துத் தட்டில் வைத்துக் கொடுக்கப்பட்டது; அறைக்குள் சென்று சாப்பிட்டார். - திருமணத்துக்கு மறுநாள் அவரைப் புதுவைச் சட்ட மன்றத் தேர்தலுக்கு மக்கள் முன்னணியின் சார்பில் நிற்கும்படி வற்புறுத்தினர்.இந்தத் தொகுதியில் பாவேந் தர் நிற்பதுதான் சரி என்று புதுவைச் சுப்பையாவும் சொல்லி அனுப்பினார். தேர்தலுக்கு நிற்கலாமா வேண் டாமா என்று பாவேந்தர் உள்ளம் ஊசலாடியது என்னை அபிப்பிராயம் கேட்டார். தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியென்றால் கையெழுத்துப் போடுங்கள்’ என்றேன். போட்டார்; வெற்றியும் பெற்றார். இராமநாதபுரம் புலவர் குழுவுக்குப் போய்விட்டுப்