பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P முருகுசுந்தரம்/95

திருந்தார். அவருக்கு வேண்டிய நண்பர் வெங்கடாசலம் வீட்டில் தங்கியிருந்தார். விழாவில் பேசினார். நானும் என் நண்பர் குலாமும் அவரைச் சந்தித்து உரையாடி னோம்.

இசுலாமிய நண்பர் குலாமை நாங்கள் அறிஞர் குலாம் என்று அன்புடன் அழைப்போம். அவர் ஆத்தூர் ஹாஜிஜி அச்சகத்தின் உரிமையாளர்: பெரியாரிடத்தில் நீண்ட நாள் தொடர்புடையவர். சீர்திருத்தவாதி; சுய மரியாதை இயக்கத் தொண்டர். அவர் பாவேந்தரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். 'இந்து மதத்தைப் போலத்தான் இசுலாம் மதத்தையும் கருதுகிறீரா? சுய மரியாதை இயக்கம் வற்புறுத்தும் சீர்திருத்தக் கருத்துக் களைக் குரானும் சொல்லுகிறது. குசான் கருத்துக்களை ஏற்று நடைமுறைப் படுத்தியவர் முகம்மது நபி. சேசு, முகம்மது, சிவன் எல்லாம் உங்களுக்கு ஒன்று தானா?" என்று கேட்டார் அவர். -

"ஆமாம்!” என்ருர் பாவேந்தர்

"அது எப்படி? உங்கள் கருத்துத் தவறு!” என்றார் குலாம். பாவேந்தருக்குச் சுள்ளென்று கோபம் வந்து விட்டது.

என்னைப் பொறுத்த வரையில் மதம் என்பது கழுதை லத்திக்குச் சமானம். கழுதை போட்ட முதல் லத்திக்கு ஒரு மரியாதையும், இரண்டாவது லத்திக்கு மற்றொரு மரியாதையும் என்னிடத்தில் கிடையாது' என்று வெடுக்கென்று சொன்னார் பாவேந்தர்.

அடுத்தநாள் திருவண்ணாமலையில் ப. உ. சண்முகம் தலைமையில் பாரதி விழா, பாவேந்தர் பேசினார். ' 'பாரதி பற்றிப் பேச எனக்குத்தான் தெரியும். அவ ரைப் பற்றிப் பேச என்னைவிடத் தகுதி இந்த நாட்டில் வேறு எவனுக்கும் இல்லை!'