பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D. முருகுசுந்தரம்/97

திப் பேசும்போது. நரன் திருச்சிராப்பள்ளியில் ஒரு தமிழறிஞர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்: குடிப்பதற் குத் தண்ணிர் கேட்டேன். வீட்டுக்குள்ளிருந்து அவரு டைய பையன் தண்ணிர் கொண்டு வந்தான். குழந்தை எத்தனை?' என்று நான் அவரைக் கேட்டேன். வீட்டில் கேட்டுச் சொல்கிறேன்' என்றார். கேட்டதில் பத்துக்குமேல் இருக்கும் என்று தெரியவந்தது. மண மக்களுக்குச் சொல்கிறேன். இப்படிப் பிள்ளை பெறக் கூடாது. பெரியார் கர்ப்ப ஆட்சி' என்ற பெயரில் குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி நூல் எழுதியிருக்கிறார். மணமக்கள் இதைக் கட்டாயம் படிக்க வேண்டும்!ை என்றார். பின்னர் தமது தவிப்பதற்கோ பிள்ளை' என்ற பாட்டை நகைச்சுவையோடு விளக்கினார்.

'திருக்குறள்தான் தமிழர் பண்பாட்டு நூல். திருக் குறளின் அடிப்படையில் தமிழர் வாழ்க்கை நெறியை யும் பண்பாட்டையும் வகுத்து அமைக்க வேண்டும். திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் சேர்ந்து முடிவு செய்தால் அதற்கேற்ப நான் குறளுக் குப் புதிய உரை எழுதுகிறேன்” என்று கூறி முடித்

தார்.