பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு 8? ‘என்னைப் புதியதோர் இன்பச் சுரங்கவர' சோதிகடலிலே தோன்றும் கரும் புள்ளியென 'வாரிப் பெருந்திரைபோல் வந்த மகிழ்ச்சி’ 'வாலைக்குழைத்து வளைத்தடிக்கும் நேர்மை’ "நீரோடும் மேனி நெருப்போடுங்கண்' முத்தமிட்டு முத்தமிட்டு மோகப்பெருமயக்கில சித்தம் மயங்கி." இத்தகைய அரிய இனிய செஞ்சொற்றொடர்களைக் கவிஞர் தமது இதயமாகிய நாணயச் சாலையினின்றும் ஆக்கிக் கவிதையை வளப்படுத்தியுள்ளார். மாறி மாறி வரும் தனது மனநிலைக் கேற்றவாறு குயிலைக் குறிப்பதற்கு மட்டிலும் பல்வேறு பெயரடை களைப் பொருத்திக் காட்டியிருக்கும் அற்புதம் சொல்லுந்தர மன்று. எ-டு கன்னிக்குயில் நீலக்குயில் மாயக்குயில் பேடைக் குயில் சின்னக் குயில் குட்டிப் பிசாசக்குயில் சிறுகுயில் செத்தைக் குயில் பிள்ளைக்குயில் வன்னக்குயில் ஒற்றைக்குயில் பொய்மைக் குயில் கானக்குயில் சின்னக் கருங்குயிலி விந்தைச்சிறுகுயில் ஆசைக்குயிலி இவை கவிதையில் இடத்திற்கேற்ப அற்புதமாய் அமைந்து. பாட்டிற்குப் புது மெருகூட்டுகின்றன. - பாட்டெங்கும் எளிய சிறு சொற்கள். இவை கவிதை யில் அமைந்து இதற்குமுன் தமிழில் காணாத ஒர் அற்புதத்தை விளைவித்துள்ளன. கவிதை உலகில் என்றுங் காணாத புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்துள்ளன