பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ குயில்பாட்டு: ஒரு மதிப்பீடு புலவர்கள் வியப்பைக் காட்டக் கையாளும் அந்தோ, ‘ஐயகோ, மாதோ’ என்ற சொற்களுக்குப் பதிலாக இவர் கையாண்டுள்ள சாமீ" என்ற சொல்லின் அழகு ம் ஆற்றலும் சொல்லற்கரியனவாகும். காதல் உணர்வு : காதலின் பெருமையைப் பாரதியார் புகழ்ந்துகூறியதை இந்நூலில் பிறிதோரிடத்தில்காணலாம்". காதலுக்கு மனிதன் அடிமையாவது போலவே மற்ற விலங்கு களும் அடிமையாகும். மனிதனின் காதலுணர்வும் விலங்கு களின் காதலுணர்வு சுரப்புநீர்களின் உந்தலால் (Hormonal drive) எழும்; ஆனால் விலங்குகளின் காதலுந் தல் நீர்சுரப்பு நின்றவுடன் அடங்கி விடும். மனிதனது காதல் உணர்வு அறிவு நிலையிலும் செயற்படுவது. இந்த உணர்வே பல அருமையான அகஇலக்கியங்கள் தோன்றுவ தற்கு அடிப்படை யாக அமைகின்றது. காதல் இல்லாத வாழ்வு பாழ்; காதலை எழுப்பி அதனை அனல்போல் கொழுந்து விட்டு எரியச் செய்யும் ஆற்றல்களில் இசை சிறந்தது, காதலின் வளர்ச்சி யில் கபடி நாடகங்கள் தோன்றுவதற்கும் வாய்ப்பு உண்டு; எதிர்பாராத இடர்கள் நேர்ந்துக் காதலின் இன்ப உணர்வைத் துன்ப உணர்வாக மாற்றுவதற்கும் வாய்ப்புகள் நேரிடலாம். ஆனால், காதல் இல்லாத திருமணம் மணமும் வண்ண எழிலும் இல்லாத மலர் போன்றதாகும். காதலைக் கற்புக் கும். கற்பைக் காதலுக்கும் தியாகம் செய்யும் ஆண் பெண் களை இலக்கியத்திலும் காணலாம்; வாழ்க்கையிலும் அநுபவபூர்வமாகக் காணலாம். இவர்களில் எவர் சிறந்தவர் என்பதை அறுதியிடஅளவுகோலேஇல்லை.இவற்றையெல்லாம் 'குயில் பாட்டு நுவல்கின்றது என்று சொல்வதில் தவறில்லை. ஆனால், இத்தனைக்கும் மேலாகப் பாட்டின்பொருள் தெளி, வாகி விட்டதா? என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே 8. இந்நூல் இயல்,பக். (24.28)