பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு 89 உள்ளது. சிறந்த ஆங்கிலக் கவிஞராகிய, ஷெல்லி படைத் துள்ள எபிசைக்கிடியான் (Epipsychidam) என்ற அற்புத மான கவிதைச் சிறப்பு வாய்ந்த ஒரு காதல் பாட்டைப்பற்றி அதன் பொருள் தெளிவற்றிருப்பதாக ஆங்கிலத் திறனாய் வாளர்கள் அடிக்கடிச் சொல்வதுண்டு. இருந்த போதிலும் அந்தக் கவிதையை ஒருவரும் குறைவாக மதிக்கவில்லை. அதன் இசையும் கவிதையும் மிகச் சிறப்பாக அமைந்துள்ள மையே இதற்குக் காரணமாகும். கற்பனை : கவிதைக்கு இன்றியமையாத அணியாக இருப்பது கற்பனை. கற்பனை என்பது, புலன்கள் நேரே ஒரு பொருளை அநுபவியாத காலத்திலும் அந்தப் பொருளை நினைவிற்குக் கொண்டுவந்து அப்பொருளினிடத்து மீண்டும் அநுபவத்தை ஏற்றவல்ல ஒருவகை யாற்றல். கற்பனை என்னும் பொதுவான சொல்லில் உவமையும் பிற அணிகளும் அடங்கும். கற்பனைதான் கவிஞனின் உள்ளத்தையும், சுவை ஞனின் உள்ளத்தையும் விரிவடையச் செய்து சிறிய பொருள் களின் அழகையும் பெரிய அளவில் கண்டு மகிழும்படி செய் கின்றது. சுருங்கக் கூறினால், கற்பனை கவிதையின் நுண்ண ணுப் பெருக்கி (Microscope) யாக அமைந்து விடுகின்றது. பாரதியாரின் பாடல்கள் நமக்கு என்றும் பேரானந்தத்தைக் கொடுப்பதற்குக் காரணம் அவற்றில் அமைந்திருக்கும் கற்பனைக் கூறுகள்தாம். இந்தக் கூறுகளைக் கொண்டு கவிஞன் தான் காணும் உலகத்தை விட புதியதோர் உலகத்தைப் படைக்க விழைகின்றான். இந்த விழைவே அவனது அகத்தெழுச்சிக்குக் காரணமாக நின்று புதியன படைக்கும் ஆற்றலைப் பெறவும் வாய்ப்பாக அமைகின்றது. சுனையில் சிறிதளவே நீர் உள்ளது. அதனைப் பருகச் சென்ற ஆண்மானுக்கும் பெண் மானுக்கும் அந்நீர் போதாது; ஒரு விலங்கு குடிப்பதற்கே போதாத அளவில் நீர் உள்ளது.